இடியாப்ப சிக்கலாகும் திருமண வாழ்க்கை! எல்லா பொருத்தமும் பாத்து கல்யாணம் பண்ணாலும் விவாகரத்து! யார் காரணம்?

Published : Jan 10, 2023, 10:20 AM IST

காதல் திருமணம் மட்டுமல்ல, வீட்டில் பொருத்தம் பார்த்து செய்து வைக்கும் திருமணங்களும் விரைவில் மூடு விழா கண்டுவிடுகின்றன. இதற்கு என்னதான் காரணம் என இங்கு காணலாம். 

PREV
15
இடியாப்ப சிக்கலாகும் திருமண வாழ்க்கை! எல்லா பொருத்தமும் பாத்து கல்யாணம் பண்ணாலும் விவாகரத்து! யார் காரணம்?

ஜோதிடம் பார்த்து ஒரு காரியத்தை தொடங்கும்போது சிக்கல் குறைவாக ஏற்பட்டு நல்ல பலன் கிடைக்கும் என மக்கள் நம்புகிறார்கள். மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி காசு பார்க்க ஜோதிடம் கூட வியாபாரமயமானது. யார் உண்மையான ஜோதிடர் என்ற குழப்பம் ஏற்படும் வகையில் புற்றீசல் போல ஜோதிடர்கள் பெருகிவிட்டனர். 
 

25

இன்றைய காலகட்டத்தில் யார் உண்மையான ஜோதிடர் என்ற விஷயமே தெரியாமல் போய்விட்டது. நல்ல நாள், முகூர்த்தம், பரிகாரம் போன்ற விஷயங்களுக்காக ஜோதிடரை நாம் அணுகுகிறோம். பஞ்சாங்கம் பார்த்து அவர்கள் நேரம் குறித்து கொடுப்பார்கள். உதாரணமாக ஒரு பொருளை வாங்க செல்கிறோம் என வைத்து கொள்வோம். குளிகை நேரத்தில் செய்தால் அந்த செயல் மறுபடியும் நடந்து கொண்டே இருக்கும் என நம்பப்படுகிறது. இதுவே குளிகை நேரத்தில் கடன் வாங்கினால், அதுவும் வாங்கி கொண்டே தான் இருப்போம். கவனம் அந்த நேரத்தில் கடன் வாங்காதீர்கள். 
 

35

நல்ல ஜோசியரை பாக்கணும்!

இப்படி ஒவ்வொரு நாளும் நல்ல நேரம், கெட்ட நேரம் எல்லாம் கலந்து தான் வருகிறது. சாஸ்திரங்கள் முறையாக கற்று தேர்ந்தவர்களிடம் ஜோதிடம் பார்த்தால் அவர்கள் உங்களுக்கு நல்ல நாள், முகூர்த்தம் ஆகியவற்றை சொல்வார்கள். உங்கள் ஜாதகத்தில் சந்திரன், சுக்கிரன், குரு ஆகிய கிரகங்களின் ஆதிகத்தை பொறுத்து சுப, அசுப நேரங்கள் மாறுபடும். அதையும் கணக்கில் கொண்டு நாள் குறித்தால் மட்டுமே திருமண பந்தம் நிலைக்கும். அதனால் முதலில் நன்கு சாஸ்திரம் கற்றுணர்ந்தவர்களை அறிந்து கொள்ளுங்கள்.  

இதையும் படிங்க; பிரியாணி இலையில் எழுதுற விஷயங்கள் அப்படியே நடக்குமா? மசாலா பொருள்களின் மகிமைகள் இதோ!

45

மணமுறிவுக்கு காரணம்? 

திருமண வாழ்க்கை சிக்கலில் அல்லாடிக் கொண்டிருந்தால் அவர்களது ஜாதகத்தில் சனீஸ்வரன், ராகு, கேது ஆகிய மூன்று கிரகங்களில் ஏதேனும் ஒன்று காரணமாக இருக்கலாம். பெரும்பாலும் ஏழாம் இடத்தில் உள்ள கிரகங்கள் நற்பலன்களை கொடுப்பதில்லை. இந்த கிரகம் சாதகம் இல்லாமல் இருந்தால் திருமண வாழ்க்கை இடியாப்ப சிக்கல்தான். இதே ஏழாம் இடத்தோடு தொடர்புள்ள மற்ற கிரகங்களுக்கு மகா தசை அல்லது தசா புக்தி நடக்கும் காலங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கும். ஏழாம் கிரகத்தின் அதிபதி ஆறாம் வீட்டில் சஞ்சரித்தாலும் விவாகரத்தின் பாதிப்புகள் அதிகரிக்கும். சுக்கிரன் ஆறாம் வீட்டோடு தொடர்பில் இருந்தால் அங்கும் மணமுறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. 
 

55
Image: Getty Images

பரிகாரம் 

திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் சரியாகி நிம்மதியான வாழ்க்கை அமைய திருமலையில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாளை வருடத்திற்கு ஒருமுறை சென்று தரிசிக்கலாம். இருதார தோஷம் நீங்க நினைப்பவர்கள் திருச்செங்கோடு அருகே உள்ள உமையொருபாகன் அர்த்தநாரீசுவரர் கோயிலில் வழிபடலாம். ஸ்ரீராமபிரான் பட்டாபிஷேக படத்தை பூஜை அறையில் வைத்து வழிபட்டால் குடும்ப வாழ்க்கை குழப்பமின்றி அமையும். 

இதையும் படிங்க; திருமணம் கைகூட கன்னி பொங்கல்! காணும் பொங்கலும் அதன் வழிபாடுகளும் முழு விளக்கம்!

Read more Photos on
click me!

Recommended Stories