பிரியாணி இலையில் எழுதுற விஷயங்கள் அப்படியே நடக்குமா? மசாலா பொருள்களின் மகிமைகள் இதோ!

First Published | Jan 9, 2023, 11:30 AM IST

சமையலறையில் நாம் பயன்படுத்தும் மசாலா பொருள்களுக்கும், ஜோதிடத்திற்கும் தொடர்புள்ளது. அவற்றை முறையாக பயன்படுத்தினால் நமக்கு நல்ல பயன்கள் கிடைக்கும். 

வாழ்க்கையில் ஏதாவது ஒரு நூலை பிடித்து முன்னேறிவிட வேண்டும் என்ற எண்ணம் எல்லாருக்குள்ளும் இருக்கும். அதற்காக தான் பல மெனக்கெடல்களில் ஈடுபடுகிறோம். ஜோதிடமும் அப்படி தான் பெரும்பாலானோருக்கு கை கொடுக்கிறது. அதிர்ஷ்டத்தை அதிகரிக்க சில மசாலா பொருள்கள் உதவுகின்றன என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் இந்து சமயத்தில் அந்த நம்பிக்கை பரவலாக காணப்படுகிறது. அது குறித்து இங்கு காணலாம். 

கண் திருஷ்டி போக்கும் மஞ்சள் 

சமையலில் இன்றியமையாத தேவையுடைய மஞ்சள், ஆன்மீகத்தில் பல சடங்குகளில் பயன்படுகிறது. தடைகள் நீங்கி நல்ல காரியங்கள் நடக்க இது உதவுகிறது. மஞ்சள், வியாழன் கிரகத்திற்கு இணக்கமான பொருள். அதனால் தான் வியாழனை ஆளும் விஷ்ணு, லட்சுமி தேவிக்கும் மஞ்சள் ஏற்றதாக உள்ளது. இது அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்குவதோடு கண் திருஷ்டியை அறவே நீக்கவும் துணை புரிகிறது. 


வேலையை மாற்றும் ஏலக்காய் 

வேலை மாற வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஏலக்காய் ஏற்ற பலனை தரும். இரவில் தூங்க செல்லும் முன்பு தியானம் செய்கிறீர்களோ இல்லையோ, தலையணைக்கு கீழ் சில ஏலக்காய்களை வையுங்கள். 

செல்வ செழிப்பிற்கு கிராம்பு 

கடின உழைப்பால் முன்னேறி கொண்டிருப்போம். ஆனால் சில தீய எண்ணம் கொண்டோரின் கண் திருஷ்டியால் வீழ்வோரும் உண்டு. அப்படி விழும் கண் திருஷ்டியை குறைக்க கிராம்பு உதவும். உங்களுக்கு பொருளாதார சிக்கல்களை குறைத்து பணம் புழங்க உதவும். அதற்கு பணம் புழங்கும் இடங்களில் கிராம்பினை வைக்கலாம். 

இலவங்கப்பட்டையும், பிரியாணி இலையும்! 

பணப்பையில் வைக்க ஏற்ற மசாலா பொருள் தான் இலவங்கப்பட்டை. பணத்தை இரண்டு மடங்காக பெருக்க நினைத்தால் இதனை பணப்பையில் வைத்து கொள்ளுங்கள். நல்ல விஷயங்களுக்காக போகும்போது இலவங்கப்பட்டையை நம்மோடு வைத்து கொள்ள வேண்டும். அதனால் காரியங்கள் கச்சிதமாக நடக்கும். 

பிரியாணி இலையில் நாம் நினைப்பதை எழுதி கொள்வதால் நினைத்த காரியம் நடக்குமாம். இந்த இலையில் நினைத்த காரியத்தை எழுதி அதனை எரித்து விட்டால் கனவும் நனவாகும். மேற்குறிப்பிட்ட இந்த மசாலா பொருள்களை உங்களுடன் வைத்து கொள்ளுங்கள். எல்லாம் நல்லதாகவே நடக்கும். 

இதையும் படிங்க; பொங்கல் பண்டிகையில் நற்பலன் பெற ஒவ்வொரு ராசிக்காரரும் எதை தானம் செய்யணும் தெரியுமா?

Latest Videos

click me!