பழமுதிர்ச்சோலை முருகன் கோயில்:
மதுரையைச் சுற்றியுள்ள சோலைமலை முருகன் கோயில், பழமுதிர்சோலை முருகன் கோயில் என்று அழைக்கப்படுகிறது இது மதுரையின் வடக்கே சுமார் 25 கி.மீ தொலைவில், அழகர்கோயிலுக்கு அருகில் உள்ள மலை மீது அமைந்துள்ள, முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாகும். குன்றி இருக்கும் இடமெல்லாம் இந்த குமரன் இருப்பான் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் மலைமேல் கோயிலில் அமைந்திருக்கும் முருகப்பெருமான்.
இங்கு, முருகன் வள்ளி, தெய்வானையுடன் காட்சி அளிக்கிறார், மேலும் அவ்வையார் சோதனையில் வென்ற இடமாகவும் இது கருதப்படுகிறது. அதாவதுஅவ்வையார் வெயிலில் களைத்து வந்தபோது, முருகன் சிறுவனாக வேடமிட்டு, பழம் தருவதாகக் கூறி சோதித்த தலம். பழம் தந்ததால் இந்த இடத்தை பலமுதிர்ச்சோலை என்று கூறப்படுகிறது.