Madurai Rakkayi Amman Temple Pazhamudhircholai : மதுரை அழகர் மலை மீது வீற்றிருக்கும் ராக்காயி அம்மன் மிகவும் சக்திவாய்ந்த குலதெய்வம். அந்தப் பாறை இடுக்கில் இருந்து எப்போதும் வற்றாமல் வரும் 'நூபுர கங்கை' தீர்த்தம் அம்மனின் அருளுக்கு ஒரு சான்
மதுரையின் சிறப்புகளில் முக்கியமானது அழகர்மலை இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசம். மலையும் வளமும், மூலிகை மணமும் நிறைந்த வனப்பகுதி. ராக்காயி அம்மன் கோயில் அமைவிடம்: மழைக்குக் கீழிருந்து ஒரு பேருந்து மழைக்கு மேல் ஏறுவதற்கு நின்று கொண்டிருக்கும் அந்த பேருந்துக்கு ஒரு நபருக்கு 50 ரூபாய் டிக்கெட்டை பெற வேண்டும் பின்பு அந்த பேருந்தில் அமர்ந்து இருபது நிமிடத்தில் மாலையை ஏறிவிடும் வழியெங்கும் காடுகள் நிறைந்த மூலிகை வாசகங்கள் நிறைந்த அம்சமாக விளங்கும்.
மலை ஏறுவதற்கு பின் முதலில் செல்லும் கோயில் முருகனின் அறுபடை வீடுகளின் ஒன்றான பழமுதிர்ச்சோலை. சென்று தரிசனம் செய்துவிட்டு ராக்காச்சி அம்மன் கோவிலுக்கு செல்வார்கள். பழமுதிர் சோலையில் இருந்து மலை மேல் ஏறும் அதில் ஒரு 10 நிமிடங்கள் மலை மீது ஏற வேண்டும் செங்குத்தாக உள்ள கருங்குளான சாலை வழியின் மீது ஏறி ராக்காயி அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும் அங்கு குரங்குகள் அதிகமாக இருக்கும் அதனால் சிலர் குச்சியுடன் கோயிலுக்கு ஏறுவார்கள்.
24
ராக்காயின் தீர்த்தம்:
இங்கு நூபுர கங்கை தீர்த்தம் விழுகிறது. இது ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதன் உற்பத்தியிடம் எவ்வளவு ஆராய்ச்சிகள் செய்த போதிலும் இன்றுவரை கண்டுப்பிடிக்கவில்லைஇத்தீர்த்தத்தில் இரும்பு சத்தும், தாமிர சத்தும் அதிகம் இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் சொல்கிறது. இந்த தீர்த்தம் நோய்கள் தீர்க்கும் சக்திக் கொண்டதால், இத்தீர்த்தம் தெற்கு நோக்கி பாயும்போது 'சிலம்பாறு' என்று வழங்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தை அனைவரும் பாட்டில்களில் பிடித்து வீட்டிற்கு கொண்டு போகும் பழக்கமும் இங்கு உண்டு ஈடு முழுவதும் தேய்த்தால் சுற்றமும் சூழும் நமக்கு நன்மையை தரும் கெட்ட சக்திகளானத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது.
34
ராக்காயின் கதை:
ராக்காயிக்கு மூன்று தம்பிகள் மற்றும் மூன்று தங்கைகள். ஆனால் ராக்காயிக்கு பெற்றோர்கள் இல்லை. ராக்காயி வேலை செய்து தம்பி தங்கைகளை காப்பாற்றி வந்தார் அவருக்கு மழையில் பகுதியில் வாழ்வதால் தேன் எடுப்பதையே தொழிலாக இருந்தது. ஒரு நாள் மருதமுத்து என்னும் ஒரு நபர் ஊருக்கு வணிகனாக வந்தார். இவனுடைய வேலை காட்டுகளை சுருட்டி அதனை நிலமாக மாற்றுவதே உன் வேலையாக இருந்து வந்தது. அங்கிருந்த மிருகங்களை வேட்டையாடியும், காடுகளை சேதப்படுத்தியும் அவர் அங்கு இருந்து வந்தான். அப்பொழுது ராக்காயி அங்கு தேன்களை சேகரித்துக் கொண்டிருந்தாள்.
தம் வணிகத்திற்கு இடையூறாக இருப்பதால் ராக்காயியை ஒரு கொள்ளைக்காரி என்று கூறி வேட்டையாடும் பழங்குடி கொள்ளக்காரி என்றும் கூறிமிகவும் அசிங்கப்படுத்தினான். கோபம் கொண்ட ராக்காயி அவனை கால்களால் எட்டி உதித்தால். மருதமுத்து வஞ்சகம் வைத்து அவளை பழித்திருக்க நினைத்து தேன் எடுத்துக் கொண்டிருந்த ராக்காயி மரத்தில் ஏறிய ஊணாக் கொடியை கொடுத்துவிட்டான். கை மேலிருந்து கீழ் விழுந்து இறந்துவிட்டால். சிறு வயதிலேயே அவள் இறந்து விட்டாள். அதன் பிறகு மக்கள் அவளை நினைத்து தெய்வமாக வழிபட்டனர்.
44
Madurai Rakkai Amman Temple
சில நாட்களுக்கு பிறகு மருதமுத்து கைகால் செயலிழந்து இறந்து விட்டார். அது மர்மமாகவே இருந்து வந்தது. ராக்காயி தான் மருத முத்துவின் உயிரை கொன்று விட்டால் என்றும் கூறப்பட்டு வந்தது அதன் பிறகு தான் அவருக்கு கோயில் கட்டி தன் வீட்டின் ஒரு குலதெய்வ பெண்ணாக மக்கள் வழிபட்டு வந்தனர். ராகு, கேது தோஷங்கள் நீங்கவும், மனநலம் மற்றும் தோல் நோய்களுக்கும் இந்த அம்மனை வழிபடுவது பலனளிக்கும் என நம்பப்படுகிறது.