அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் 5 செடிகள் :
1. ஜேட் செடி :
இந்த தீபாவளிக்கு இந்த செடியை உங்கள் வீட்டில் வாங்கி வைப்பது ரொம்பவே நல்லது. ஏனெனில் இந்தச் செடி உங்கள் வீட்டிற்கு நேர்மறை ஆற்றலையும் செல்வத்தையும் கொண்டுவரும் என்பது ஐதீகம். மேலும் இந்த செடி லட்சுமி தேவியால் ஆசீர்வதிக்கப்பட்டதாக பலர் நம்புகிறார்கள்.
2. மூங்கில் செடி :
மூங்கில் செடியை வீட்டில் வைப்பது மூலம் வீட்டில் அமைதி, மகிழ்ச்சி, செழிப்பு ஆகியவை தங்கும். மேலும் இந்த செடி நேர்மறை ஆற்றலையும் இருக்கிறது. எனவே, இவற்றைப் பெற இந்த தீபாவளிக்கு இந்த செடியை உங்கள் வீட்டில் உடனே வாங்கி வையுங்கள்.
3. மணி பிளான்ட் :
உங்கள் வீட்டின் அழகை மேம்படுத்துவதற்கும், மகிழ்ச்சி, செல்வம் மற்றும் ஆரோக்கியத்தை தருவதற்கும், காற்றை சுத்தப்படுத்துவதற்கும் மணி பிளான்ட் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே உடனே இந்த செடியை இந்த தீபாவளிக்கு வாங்குங்கள்.