இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு தனி சிறப்பு உண்டு. வாஸ்து சாஸ்திரத்தில் பல விஷயங்கள் சொல்லப்படுள்ளன. அவற்றை பின்பற்றுவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். மேலும் இந்த மதத்தின் நோக்கம் பெரியதாக இருப்பதால் அதில் தெய்வங்களின் எண்ணிக்கை, சுப அறிகுறிகள், சடங்குகள் மற்றும் மரபுகள் ஆகியவையும் பெரியவை என்றே சொல்லலாம்.
25
Peacock Feather Vastu Tips In Tamil
இந்து மதத்தில் தெய்வங்களைப் போலவே விலங்குகள் மற்றும் பறவைகளுக்கும் தனி சிறப்பு உண்டு. அதனுடன் தொடர்புடைய பல நம்பிக்கைகள் சுப மற்றும் அசுப விஷயங்களும் உள்ளன. அந்த வகையில் இந்தியாவின் தேசிய பறவை என மயிலுக்கும் இந்து மதத்தில் தனி முக்கியத்துவம் உண்டு.
புராண நூல்களின்படி, லட்சுமிதேவி, கணபதி, கிருஷ்ணன், முருகன் போன்ற தெய்வங்களுக்கு மயில் மிகவும் பிரியமானது. மயிலிறகு வீட்டின் அழகை கூட்டுவது மட்டுமின்றி, வீட்டில் இருந்து எதிர்மறை ஆற்றலை நீக்கி, வீட்டில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பை உண்டாக்கச் செய்யும்.
1. வாஸ்து தோஷம் நீங்க மயில் தொகையை வீட்டின் தென்கிழக்கு திசையில் வைத்தால் அது மங்களகரமானதாக கருதப்படுகிறது.
2. மயிலிறகுகளை வீட்டில் தெற்கு திசையில் பாதுகாப்பாக வைப்பதன் மூலம் பொருளாதார பிரச்சினைகள் நீங்கி வீட்டில் பணம் பெருகும் என்பது ஐதீகம்.
3. ராகுவின் கோபத்தை தவிர்க்க வீட்டின் கிழக்கு அல்லது வடகிழக்கு சுவரில் மயிலிறகுகளை வைக்க வேண்டும் இந்த திசைகளில் மயிலிறகுகளை வைப்பதன் மூலம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
55
Peacock Feather Vastu Tips In Tamil
4. திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை நீக்க படுக்கை அறையில் மயில் இறகை வைக்க வாஸ்து சாஸ்திரம் அறிவுறுத்துகிறது. ஏனெனில் மயிலிறகானது காதல் விவகாரங்களுக்கு இனிமை தருகிறது. எனவே திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க உங்களது படுக்கையறையில் தென்மேற்கு திசையில் மயிலிறகுகளை வைக்க வேண்டும்.
5. குழந்தைகள் படிக்கும் புத்தகங்களில் மயிலிறகை வைத்தால் சரஸ்வதி தேவியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
நினைவில் கொள் : மயில் இறகுகளை உடைந்து அல்லது வெடித்த பொருட்களுடன் ஒருபோதும் வைக்க வேண்டாம். இந்த பொருட்களுடன் மயிலிறகை வைத்தால் நேர்மறை ஆற்றல் அழிக்கப்படுகின்றன.