Kandha Sashti Viratham: 16 செல்வங்களையும் வாரி வழங்கும் கந்த சஷ்டி விரதம்.! முருகன் அருளை பெரும் வழிபாட்டு முறைகள்.!

Published : Oct 22, 2025, 05:30 AM IST

கந்த சஷ்டி விரதம் என்பது ஐப்பசி மாதம் முருகப்பெருமானின் சூரசம்காரத்தை நினைவுகூரும் ஆறு நாள் விரதமாகும். இந்த விரதத்தை பக்தியுடன் கடைப்பிடிப்பதன் மூலம், குழந்தை பாக்கியம் உட்பட 16 வகையான செல்வங்களையும் பெற்று, வாழ்வில் வளம் பெறலாம்.

PREV
16
எல்லா சந்தோஷங்களும் உங்களை தேடி வரும்

தமிழர்களின் ஆன்மீக வாழ்வில் மிகப்பெரிய இடத்தைப் பெறும் விரதம் தான் கந்த சஷ்டி விரதம். ஆண்டுதோறும் ஐப்பசி மாத வளர்பிறையில் நடைபெறும் இந்த ஆறு நாட்கள் விரதம் முருகப்பெருமானின் சூரசம்காரம் வெற்றியை நினைவுகூரும் வகையில் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை பக்தியுடன் கடைப்பிடிப்பவர்கள் வாழ்க்கையில் எதிர்நிலைகளைக் கடந்து 16 விதமான செல்வங்களையும் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

26
முருகனின் அருளால் இதெல்லாம் கிடைக்கும்

அந்த 16 செல்வங்கள் — ஆயுள், ஆரோக்கியம், அறிவு, பிள்ளைப் பேறு, துணை, வீடு, நிலம், வாகனம், தொழில், புகழ், மன அமைதி, ஆன்மிகம், உறவுகள், தெய்வ அருள், பண செல்வம், முக்தி எனப் பலவாகும். முருகனின் அருளால் இவை அனைத்தும் பூரணமாகக் கிடைக்கும். குறிப்பாக, பிள்ளைப் பேறு வேண்டி விரதம் இருப்பவர்களுக்கு இந்த சஷ்டி மிகுந்த பயன் தரும் என்று பண்டிதர்கள் கூறுகின்றனர்.

அக்டோபர் 22ஆம் தேதி புதன்கிழமை, பிரதமை திதியில் ஆரம்பித்து, அக்டோபர் 27ஆம் தேதி சஷ்டி திதி வரை ஆறு நாட்கள் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. மகா சஷ்டி நாளில் சூரசம்காரம் மற்றும் திருக்கல்யாணம் போன்ற விழாக்கள் முருகன் கோவில்களில் சிறப்பாக நடைபெறும்.

36
உடல் சுத்தம் மட்டுமல்லாது மனமும் சுத்தமாகும்

பொதுவாகவே கந்த சஷ்டிக்கு 48 நாட்கள் விரதம் 21 நாட்கள் விரதம் ஆறு நாட்கள் விரதம் என்று அவரவர் சௌகரியத்திற்கு ஏற்ப விரதத்தை அனுஷ்டிப்பார்கள்.

இந்த விரதத்தின் சிறப்பு – குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்கு மிகுந்த பயன் தருவதாகும். "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்ற பழமொழி போல, முருகனின் நாமத்தை நம்பிக்கையுடன் ஜபித்து சஷ்டி விரதம் இருந்தால் கர்ப்ப பாக்கியம் கிடைக்கும் என ஐதீகம் கூறுகிறது.

விரத நாட்களில் காலை முருகன் ஆலயத்துக்குச் சென்று தீபம் ஏற்றுதல், கந்த சஷ்டி கவசம், திருப்புகழ் ஆகியவற்றை பாராயணம் செய்தல் நல்லது. சிலர் இந்த ஆறு நாட்களும் உப்பில்லா உணவு அல்லது ஒரு வேளை உணவு மட்டும் எடுத்துக் கொண்டு விரதம் இருப்பார்கள். இதன் மூலம் உடல் சுத்தம் மட்டுமல்லாது மனமும் சுத்தமாகும்.

46
மனதில் தோன்றும் ஆசைகள் தாமாகவே நிறைவேறும்

இந்த விரதத்தின் மஹிமை என்னவெனில், மனதில் தோன்றும் ஆசைகள் தாமாகவே நிறைவேறும். திருமணம் தாமதமாகும் இளைஞர்கள், பிள்ளை பாக்கியம் வேண்டுவோர், தொழில் வளர்ச்சி நாடுவோர் — அனைவருக்கும் இந்த விரதம் சிறந்த ஆன்மிக வழி. முருகனின் அருளால் வாழ்க்கை முழுதும் நலன்களும் செல்வங்களும் பெருகும்.

56
பல வகை விரத முறைகள்

மகாகந்தசஷ்டி விழாவின் போது லட்சக்கணக்கான முருக பக்தர்கள் காப்பு கட்டியும், மாலை அணிந்தும், காப்பு கட்டாமலும் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுவது வழக்கம். மிளகு விரதம், துளசி விரதம், இளநீர் விரதம் என பல வகைகளில் கந்தசஷ்டி விரதம் பக்தர்களால் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

66
சூரசம்ஹாரம் நிறைவடைந்த பிறகு விரதத்தை நிறைவு செய்யலாம்

இத்தனை நாட்கள் எங்களால் விரதம் இருக்க முடியாது என்பவர்கள், ஒரே ஒரு நாள் மகா கந்த சஷ்டி விரதம் இருக்க நினைப்பவர்கள் சூரசம்ஹாரம் நடைபெறும் நாளான அக்டோபர் 27ம் தேதியன்று காலை துவங்கி, மாலை சூரசம்ஹாரம் நிறைவடைந்த பிறகு விரதத்தை நிறைவு செய்யலாம். எத்தனை நாட்கள் விரதம் இருந்தாலும் ஒரு வேளை உபவாசமாக இருந்து விரதம் இருக்கலாம். அப்படி முடியாதவர்கள், எளிமையான சைவ உணவுகளாக எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். இதை எல்லாவற்றையும் விட ஓம் சவபணபவ, ஓம் சண்முக பவ எனும் மந்திரத்தை சொல்லிவந்தாலே முருகனின் முழுமையாக கிடைக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories