கஜகேசரி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்!! அதிர்ஷ்டமும் பணமும் உங்களை தேடி வரும்..!

Published : May 16, 2023, 01:36 PM IST

Gajakesari Yoga: மேஷ ராசியில் உருவாகும் கஜகேசரி யோகம் உருவாகிறது. இதனால் 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசமாகும். 

PREV
14
கஜகேசரி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்!! அதிர்ஷ்டமும் பணமும் உங்களை தேடி வரும்..!

மே 17ஆம் தேதியான நாளை வியாழன், சந்திரன் ஆகிய கிரகங்கள் இணைவதால் கஜகேசரி யோகம் ஏற்படுகிறது. மேஷ ராசியில் உருவாகும் கஜகேசரி யோகத்தால் பல ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். மே 17ஆம் தேதி இரவு 7.39 மணிக்கு சந்திரன் மீன ராசியில் இருந்து விலகி மேஷ ராசிக்குள் நுழைகிறார். அவர் மே 19ஆம் தேதி வரை அங்கு அமர்வார். வியாழன் ஏற்கனவே அங்கு சந்திரனுடன் இணைந்திருப்பதால் கஜகேசரி யோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் பலரின் அதிர்ஷ்டம் பிரகாசமாகிறது. 

24

மேஷம் 

மேஷ ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகம் உருவாகி சிறப்பான பலன்கள் கிடைக்கும். இந்த ராசியில் வியாழன், சந்திரன் இணைவு ஏற்படுவதால், இந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு அதிகமாகும். இந்த நேரம் தொழிலதிபர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். பணியிடத்தில் ஒத்துழைப்பு இருக்கும். இந்த காலகட்டத்தில் பெரிய ஆளுமைகளுடன் தொடர்பு ஏற்படும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும்.

34

மிதுனம்

வியாழன், சந்திரன் இணையும் கஜகேசரி யோகம் இந்த ராசிக்கு சாதகமாக உள்ளது. இந்த நேரத்தில், இந்த ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மரியாதை கிடைக்கும். சம்பள உயர்வு இருக்கும். கடினமாக உழைப்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். பணியாளர்கள் பல நன்மைகளைப் பெறலாம். ஆன்மீகத்தில் உங்கள் நாட்டம் அதிகரிக்கும். 

இதையும் படிங்க: ராகு-கேது பெயர்ச்சி 2023 : இந்த 5 ராசிகளுக்கு நல்ல நேரம்.. வீட்டில் பண மழை கொட்டி தீர்க்கும்!

44

துலாம் 

வியாழன், சந்திரன் ஆகிய கிரகங்கள் இணைவதால் கஜகேசரி யோகம் உருவாகிறது . இந்த யோகம் துலாம் ராசிக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த நேரத்தில் உங்கள் குழந்தைகளிடம் இருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். தொழிலதிபர்களும் வியாபாரத்தில் அதிக லாபம் பெறுவார்கள். உங்கள் புரிதலின் மூலம் பிரச்சனைகளை தீர்க்க முடியும். இதனால் பணம் சம்பாதிப்பது எளிதாகிறது. 

இதையும் படிங்க: வைகாசி விசாகம் 2023 எப்போது ? முருகனின் பரிபூரண ஆசியை பெற எப்படி வழிபட வேண்டும்?

Read more Photos on
click me!

Recommended Stories