November 28th - இன்றைய ராசிபலன் : இன்று பொறுமை காக்கவேண்டிய ராசிகள் இவர்கள்தான்!

Published : Nov 28, 2022, 05:30 AM IST

Horoscope Today- Indriya Rasipalan November 28th 2022: பிரபல ஜோதிடர் சிராக் தருவல்லா (Chirag Daruwalla) கணிப்பின் படி, இன்றைய (28/11/ 2022) 12 ராசிகளில் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.  

PREV
112
November 28th - இன்றைய ராசிபலன் : இன்று பொறுமை காக்கவேண்டிய ராசிகள் இவர்கள்தான்!
மேஷம்

இன்று நன்மை தரும் நாள். எந்த வேலைக்கும் கடின உழைப்புக்கு ஏற்ற முழுமையான வெகுமதி அளிக்கப்படும். தொலைபேசி அழைப்புகள் மூலம் முக்கியமான தகவல் வந்து சேரும். எதிர்மறையான வார்த்தைகளைப் பயன்படுத்துவது சர்ச்சைக்குரிய சூழ்நிலையை உருவாக்கும். வேலைத் துறையில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்.
 

212
ரிஷபம்

இன்று ஆன்மீக நடவடிக்கைகளில் சிறிது நேரம் செலவிடுவீர்கள். பரம்பரை தகராறு இருந்தால், அதைத் தீர்ப்பதற்கான சரியான நேரம் இது. நிதி விஷயங்களில் சிந்தித்து முடிவெடுப்பீர்கள். அதிக நம்பிக்கை உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். தொழில் நிலை மாறாமல் இருக்கலாம்.
 

312
மிதுனம்

நீண்ட நாள் கவலை மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். இன்று எடுக்கப்பட்ட முடிவு உங்களுக்கு சாதகமான சூழ்நிலையை வழங்கும். உங்கள் தனிப்பட்ட வேலைகளில் அதிக கவனம் செலுத்துங்கள். இன்று சில புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம்.
 

412
கடகம்

இன்று வெற்றிக்கான நாள். எடுத்த காரியங்கள் அனைத்திரும் வெற்றி கிடைக்கும். எதையும் செய்வதற்கு முன் அதன் நேர்மறை மற்றும் எதிர்மறையான தாக்கத்தைப் பற்றி யோசித்து செயல்படுங்கள். படிக்கும் மாணவர்கள் சோம்பலால் அவதிப்படுவார்கள்.
 

512
சிம்மம்

புதிய திட்டங்கள் தீட்டப்படும், நிலுவையில் உள்ள காரியங்கள் விரைவில் நிறைவேறும். பழைய சொத்து சம்பந்தமாக தகராறு ஏற்படலாம். நெருங்கிய உறவினர்களிடமும் சுயநல உணர்வு காணப்படும். ஆதாயத்திற்காக போடப்பட்ட ஒப்பந்தம் தொடரலாம்.
 

612
கன்னி

இன்று நிதி விவகாரங்களை வலுப்படுத்த ஒரு நல்ல நாள். சில நேரங்களில் சந்தேகத்திற்கிடமான இயல்பு உங்களுக்கும் மற்றவர்களுக்கும் சிக்கலை உருவாக்கலாம். எனவே உங்கள் இயல்பைக் கவனித்துக்கொள்ளுங்கள். வேலைத் துறையில் உங்கள் செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை யாரிடமும் வெளிப்படுத்த வேண்டாம்.
 

712
துலாம்

இன்றைய நாள் நன்மை தரும் நாள். உங்கள் கனவுகள் மற்றும் கற்பனைகளை நனவாக்க இது ஒரு சிறந்த நேரம். உங்கள் திறமையை நம்பினால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபார வணிகத்தில் சாதகமான பலன்கள் இருக்கலாம்.
 

812
விருச்சிகம்

குடும்பத்துடன் சௌகரியமான பொருட்களை வாங்குவதில் மகிழ்ச்சியாக நேரம் செலவிடப்படும். கொடுத்துவைத்த கடன் பணம் வந்து சேரும். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். தவறான புரிதல்கள் உறவைக் கெடுக்கும்.
 

912
தனுசு

உங்கள் திறமைகளை மக்கள் முன் வெளிப்படுத்தலாம். வீடு புதுப்பித்தல் தொடர்பான திட்டங்கள் இருந்தால் அதை இன்று தொடங்கலாம். முதலீடு தொடர்பான செயல்பாடுகளையும் தவிர்க்கவும். கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்படலாம்.
 

1012
மகரம்

எந்த ஒரு வேலையும் செய்வதற்கு முன் வீட்டில் அனுபவமுள்ள ஒருவரிடம் ஆலோசனை கேளுங்கள் வெற்றி கிடைக்கும். சிந்தனையுடன் கூடிய உழைப்பு எதிர்காலத்தில் பலன் தரும். பணிபுரியும் இடத்தில் கூட்டாளிகள் மற்றும் பணியாளர்களுடன் நட்பாக இருங்கள்.
 

1112
கும்பம்

இன்று நிதித் திட்டங்கள் தொடர்பான பணிகளில் அதிக கவனம் செலுத்துங்கள். பெரியவர்களின் ஆசிர்வாதத்தையும் அன்பையும் பெற்று முன்னேறுவீர்கள். வீட்டு பிரச்சனையை நிதானமாக தீர்க்கவும். அந்நியரை அதிகமாக நம்புவது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
 

1212
மீனம்

இன்று வீட்டு பராமரிப்பு பணிகளில் அதிக நேரம் செலவிடப்படும். கலைப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். இன்று எந்த ஒரு முக்கிய முடிவும் எடுப்பதை தவிர்க்கவும். வெளி நபர்களுடன் தொடர்பு கொள்ளாமல் இருப்பது நல்லது.
 

Read more Photos on
click me!

Recommended Stories