நம் வீட்டில் மகாலட்சுமி குடிகொள்ள வேண்டுமெனில் பெண்கள் சில தவறை எக்காரணம் கொண்டும் செய்யவே கூடாது. குடும்பம் செல்வ செழிப்போடு இறைவன் அனுகிரகத்தோடு இருக்க பெண்கள் மறக்காமல் நெற்றியில் சந்தன திலகம் இட வேண்டும். அதை எப்படி இட்டு கொள்வதினால் பலன் கிடைக்கும் என்பதை இங்கு காணலாம்.
ஒரு வீட்டில் பெண்கள் சரியாக இருந்தால் தான் அந்த குடும்பம் தழைத்தோங்கும். பெண்கள் கையில் தான் ஒவ்வொரு குடும்பத்தையும் முன்னேற்றமும் இருக்கிறது. இங்கே கொடுத்துள்ள குறிப்புகளை பெண்கள் பயன்படுத்துவதால் குடும்பம் செல்வ செழிப்போடு வளமாக இருக்க முடியும்.
ஒரு குடும்பத்தில் முன்னேற்றம் தடை ஏற்பட பெண்களுக்கு முன்கோபம் இருப்பது தான் முக்கிய காரணம். எந்த குடும்பத்தில் பெண்கள் அதிகம் கோபம் கொள்பவர்களாக இருக்கிறார்களோ அங்கு நல்லது நடக்காது. ஆண்களின் கோவம் சில நிமிடங்களில் தணிந்தாலும், பெண்களின் கோவம் மனதில் அடியாழம் வரை செல்லும். அதனால் குடும்பப் பெண்கள் கோபத்தை கட்டுக்குள் வைப்பது நல்லது.
கோபத்தை கட்டுக்குள் வைக்க தியானத்தில் ஈடுபடலாம். ஆனால் வீட்டு வேலைகளில் மூழ்கிக் கிடக்கும் இல்லற பெண்களுக்கு தியானம் செய்ய நேரம் இருப்பதில்லை. அவர்கள் லட்சுமி தேவியின் அருளைப் பெற தூய்மையான சந்தன பொடியுடன், கஸ்தூரி மஞ்சள் தூள் 2 தேக்கரண்டி, கொஞ்சம் ஜவ்வாதும் துளசி பொடியும் எடுத்துக் கொள்ளுங்கள்.
இந்த பொடிகளை லட்சுமி தேவியின் பாதங்களில் வைத்து பூஜை செய்யுங்கள். அப்போது லட்சுமி தேவியின் ஆசி எங்கள் குடும்பத்திற்கு கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள். இந்த பொடியை தினமும் காலையில் எழுந்து குளித்த பிறகு கொஞ்சம் தண்ணீர் அல்லது பன்னீரை கலந்து நெற்றியில் திலகம் இட்டுக் கொள்ளுங்கள். இதை தினமும் கடைப்பிடிக்க பெண்களின் முன்கோபம் கட்டுக்குள் வரும். முன்கோபியாக இருக்கும் ஆண்களும் குழந்தைகளும் கூட இதை பின்பற்றலாம்.