எந்த கெட்டது நடந்தாலும் சனி பகவான் மீது பழி போடும் சிலரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் எல்லா நேரமும் உங்களை தண்டிப்பது சனி பகவானின் வேலையில்லை. தவறான வழியில் செல்பவர்கள் தான் சனிக்கு பயப்பட வேண்டும். அவருக்கு கோபம் வந்தால் தணிய காலம் அதிகம் ஆகும். அதே நேரத்தில் நாம் நியாயமாக நடந்து கொண்டால் ஆசியும் வழங்குவார்.
சனி பகவானின் அருள் உங்கள் மீது இருந்தால் சில அறிகுறிகள் மூலம் சனிக்கிழமை அன்று அதை தெரிந்து கொள்ளலாம். இந்து சமயத்தின் நம்பிக்கையின்படி, சனிக்கிழமைகளில் கீழே குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு அறிகுறியை நீங்கள் கண்டிருந்தால் சனி பகவான் உங்களுக்கு கருணை மழை பொழிவார் என அர்த்தம். உங்களுக்கு விரைவில் நல்ல நேரம் தொடங்கி விடும். அதை இங்கு காணலாம்.