Today Rasipalan 29th Mar 2023: சொத்து வாங்கனும்னா உடனே வாங்கிருங்க.! எந்தெந்த ராசிக்காரருக்கு என்னென்ன பலன்.?

Published : Mar 29, 2023, 05:30 AM IST

மார்ச் 29ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.  

PREV
112
Today Rasipalan 29th Mar 2023: சொத்து வாங்கனும்னா உடனே வாங்கிருங்க.! எந்தெந்த ராசிக்காரருக்கு என்னென்ன பலன்.?

மேஷம்:

வீட்டு வேலையை முடிக்க திட்டமிடுவீர்கள். மாணவர்கள் படிப்பையும், இளைஞர்கள் கெரியரையும் நினைத்து கவலைப்படுவார்கள். வேலையில் அதிக அக்கறை தேவை. ஒப்பந்தங்கள் கையெழுத்திட வாய்ப்புள்ளது. உங்கள் திட்டங்களை யாரிடமும் பகிராமல் ரகசியம் காக்கவும்.
 

212

ரிஷபம்:

உங்கள் கடின உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் ஏற்ற ஆதாயம் கிடைக்கும். வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு விருப்பமான செயல்களை செய்வதன் மூலம் மன நிம்மதி பெறுவீர்கள். சொத்து ரீதியாக பிரச்னை வரலாம். ஆனால் அமைதியாக அந்த வேலை முடியும். உத்யோகத்தில் பிரச்னை வரும். தீர்வும் கிடைக்கும்.
 

312

மிதுனம்:

பணம் ரீதியான விஷயங்களை சரியான நேரத்தில் செய்து முடிக்கவும். உங்கள் மீதான பொறாமையால் உங்களை பற்றி வதந்திகளை சிலர் கிளப்பிவிடுவார்கள். ஆனால் அதை பொருட்படுத்தாமல் உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். ஆன்லைன் தொழில்களில் ஆதாயம் கிடைக்கும்.
 

412

கடகம்:

கஷ்டப்படுபவர்களுக்கு உதவுவதன் மூலம் மன நிம்மதி அடைவீர்கள். எதிர்மறை சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். தொழில் சுமூகமாக நடக்கும். ஊழியர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். 

512

சிம்மம்:

நெருங்கிய உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும். உங்கள் தகுதிக்கேற்ப கடன் வாங்குங்கள்.  மன அமைதியுடன் இருங்கள். உயரதிகாரிகள் மற்றும் பெரிய பொறுப்பில் இருப்பவர்களுடனான நல்லுறவு உங்கள் தொழிலில் ஆதாயம் அளிக்கும். 
 

612

கன்னி:

 பணப்பரிமாற்றத்தில் கவனமாக இருக்கவும். ஆவணங்களை மிகக்கவனமாக சரிபார்க்கவும். அப்படி இல்லையென்றால் பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது. உங்கள் வேலைத்திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். 
 

712

துலாம்:

சமூக சேவை செய்வீர்கள். அதேவேளையில் உங்கள் வேலையிலும் கவனம் செலுத்தவும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் பெறுவீர்கள். வாகனம் ஓட்டும்போது அதிக கவனம் தேவை. தொழிலில் பிரச்னைகள் ஏற்படலாம். ஊழியர்களுடன் சுமூகமான உறவை கடைபிடிக்கவும். கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். 
 

812

விருச்சிகம்:

வீட்டை மறுசீரமைப்பது குறித்து ஆலோசிப்பீர்கள். பட்ஜெட்டை கவனத்தில் கொண்டு திட்டமிடவும். இல்லையெனில் பொருளாதார பிரச்னையில் சிக்கிக்கொள்ள நேரிடும். சிறிய கவனக்குறைவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம். அதனால் அதிக கவனம் தேவை. கோபத்தை தவிர்க்கவும்.

912

தனுசு:

சொத்து, வாகனம் வாங்க இதுதான் சரியான நேரம். தேவையில்லாத செலவுகள் மனக்கஷ்டத்தை ஏற்படுத்தும். தொழிலில் அரசாங்க ரீதியான வேலைகளில் வெற்றி கிடைக்கும். உங்களுக்கு சிறந்த வளர்ர்ச்சி கிடைக்கும்.

1012

மகரம்:

வீட்டில் ஆன்மீக நிகழ்வை நடத்துவதன் மூலம் பாசிட்டிவ் எனர்ஜி நிறைந்திருக்கும். உங்கள் பணித்திறன் பாதிப்படையும். முக்கியமான முடிவெடுப்பதில் அவசரம் வேண்டாம். எதிர்மறை நபர்களிடமிருந்து விலகியே இருங்கள். 
 

1112

கும்பம்:

உங்களது கடின உழைப்பும் முயற்சியும் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தவும். கோபம் உங்கள் வேலையை பாதிக்கும். பணியிடத்தில் பிரச்னை ஏற்படலாம். கூட்டுத்தொழிலில் வெளிப்படைத்தன்மை அவசியம். குடும்ப விஷயங்களில் வெளிநபர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம்.
 

1212

மீனம்:

முக்கியமான வேலையில் வீட்டில் இருக்கும் மூத்தவர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படவும். அவர்களின் சரியான அறிவுரையின் மூலம் கண்டிப்பாக உங்களுக்கு வெற்றி கிடைக்கும். தேவையில்லாத செலவுகளை குறைக்கவும். ஊழியர்களுடனான பிரச்னை முடிவுக்கு வரும். 
 

Read more Photos on
click me!

Recommended Stories