Today Rasipalan 26th Apr 2023: ரிஸ்க்கான முதலீடு எதுவும் வேண்டாம்.! எதிர்பார்த்த ரிசல்ட் கண்டிப்பாக கிடைக்கும்

First Published | Apr 26, 2023, 5:30 AM IST

ஏப்ரல் 26ம் தேதியான இன்றைய தினத்திற்கான 12 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்ப்ப்போம்.
 

மேஷம்:

அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த நாளாக இருக்கும். சிரத்தையில்லாமல் வேலைகளை எளிதாக செய்து முடிப்பீர்கள். அரசு சார்ந்த வேலை சரியான நேரத்தில் முடியும். ஆன்மீக ஈடுபாடும் ஆர்வமும் அதிகரிக்கும். வரவுக்கேற்ப செலவும் அதிகரிக்கும். தேவையில்லாத விவாதங்களை தவிர்க்கவும். பேச்சை குறைக்கவும்.
 

ரிஷபம்:

இன்று உங்களுக்கு சாதகமான நாள். நீங்கள் எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கும். மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்காதீர்கள். தொழில் சிறப்பாக இருக்கும். வேலை மற்றும் பேச்சில் ஸ்மார்ட்டாக இருக்கவும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
 

Tap to resize

மிதுனம்:

குடும்பத்தில் இருந்துவந்த பிரச்னை முடிவுக்கு வரும். உங்களுக்கு விருப்பமான செயல்களில் நேரம் செலவழிக்கவும். கோபத்தை கட்டுப்படுத்தவும். ரிஸ்க்கான விஷயங்களில் முதலீடு செய்ய வேண்டாம். தொழில் பிரச்னையை வீட்டிற்குள் எடுத்து செல்லாதீர்கள்.
 

கடகம்:

நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். அண்மைக்காலமாக இருந்துவந்த கவலை நீங்கும். மத்தியஸ்தரின் உதவியுடன் உங்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள்.
 

சிம்மம்:

தொழிலில் அதிக கவனம் தேவை. உங்கள் போட்டியாளர்கள் அதிக ஆக்டிவாக செயல்படுவார்கள். ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவது அவசியம். கணவன் - மனைவி இடையே இனிமையான உறவு இருக்கும்.
 

கன்னி:

பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் செயல்திறனால் வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். காரணமில்லாமல் யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள். திடீர் செலவு வரும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் அகலும். 
 

துலாம்:

நீண்டகாலமாக தேங்கிக்கிடந்த வேலை இன்று முடியும். வருவாய்க்கான வழிகள் அதிகரிக்கும். இளைஞர்களுக்கு தேர்வு மற்றும் நேர்காணலில் வெற்றி கிடைக்கும். உங்களுக்கு எதிராக உங்கள் நண்பரே சதித்திட்டம் தீட்டுவார். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும்.
 

விருச்சிகம்:

குழந்தைகளின் பிரச்னைகளை தீர்த்து மன நிம்மதி அடைவீர்கள். தந்தை மகனுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். வீட்டில் இருக்கும் எலக்ட்ரிகல் பொருள் ஏதாவது பிரச்னை ஆகும். உங்கள் கடின உழைப்புக்கேற்ற ரிசல்ட் வேலையில் கிடைக்காது. வீட்டில் உள்ள பிரச்னையால் கணவன் - மனைவி உறவில் விரிசல் ஏற்படும். 
 

தனுசு:

ஆன்மீக ஈடுபாடு மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். நண்பரின் அறிவுரை உங்களுக்கு பலனளிக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். சொத்து விவகாரங்களில் தடங்கல் ஏற்படும். வேலை செய்யும் உத்தியை மாற்றிக்கொள்ள வேண்டும். டயட்டில் கவனம் செலுத்தி ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

மகரம்:

மாணவர்களுக்கு படிப்பில் நல்ல ரிசல்ட் கிடைக்கும். வேறு யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் உங்கள் வேலையை நீங்களே செய்து முடியுங்கள். பட்ஜெட்டுக்கு மேல் செலவு ஆகும். அதனால் பொருளாதார நிலை பாதிக்கும். கடின உழைப்பால் சாதிப்பீர்கள். குடும்பத்தில் இனிமையான சூழல் நிலவும்.
 

கும்பம்:

சொத்து விற்கும் அல்லது வாங்கும் வேலை வெற்றிகரமாக முடியும். புதிய வாய்ப்புகள் உருவாகும். சகோதர உறவு வலுப்படும். குழந்தைகளின் நெகட்டிவ் செயலால் கவலை ஏற்படும். தொழில் விஷயங்களில் கவனம் தேவை. ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 
 

மீனம்:

வாகனம் வாங்க ஏற்ற தினம். உங்கள் வேலையில் சிறந்து விளங்குவீர்கள். மென்மையாக நடந்துகொள்ளவும். தேவையில்லாத பிரச்னைகளை தவிர்க்கவும். தொழிலில் அதிக கவனம் தேவை. கணவன் - மனைவி உறவு நன்றாக இருக்கும்.
 

Latest Videos

click me!