சென்னை ISKCON.. ஈசிஆர் கோவிலின் 44வது ரத யாத்திரை திருவிழா - பெரும் திரளாக கலந்துகொண்ட பக்தர்கள்!

First Published | Jul 7, 2024, 10:52 PM IST

சென்னை ISKCON, ஈசிஆர் கோவிலின் 44வது ரத யாத்திரை திருவிழா இன்று ஞாயிற்றுகிழமை ஜூலை 7ம் கோலாகலமாக நடைபெற்றது.

ISKON Chennai

இன்று ஞாயிறு மதியம் சுமார் 2.30 மணியளவில் இந்த ரத யாத்திரை நடந்தது. சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட ரதம், பல்லவாக்கம் ஈசிஆர் (ரிலையன்ஸ் சூப்பர் ஸ்டோருக்கு அருகில்) ஆரம்பித்து, நீலங்கரை, வெட்டுவாங்கேணி, மற்றும் இஞ்ஜம்பாக்கம் வழியாக சென்று, இறுதியாக அக்கரை ISKCON கோவிலுக்கு வந்தடைந்தது.

உங்க குலதெய்வம் யாருனு தெரியலையா? இந்த 1 காரியத்தை செய்தாலே குலதெய்வம் அருள் பூரணமா கிடைக்கும்!! 

ISKCON

ஜகந்நாதர், பாலபத்ரர், மற்றும் சுபத்ரா ஆகிய தெய்வங்களை கொண்டாடும் இத்திருவிழா, பக்தர்களையும், பார்வையாளர்களையும் அதிக அளவில் ஈர்த்தது என்றே கூறலாம். மகிழ்ச்சியோடும், பக்தியோடும் பாடப்பட்ட சங்கீர்த்தனத்தின் ஒலியால் அந்த இடமெங்கும் சந்தோஷ ஆர்ப்பாட்டமாக இருந்தது என்றே கூறலாம்.

Tap to resize

Chennai ISKCON

“ரத யாத்திரையை கொண்டாடுவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். ஜகந்நாதர், பாலபத்ரர், மற்றும் சுபத்ரா ஆகிய தெய்வங்களை சிறிய பல்லக்கில் இழுத்து கொண்டு செல்ல, இந்த திருவிழா நமக்கு மிகவும் சிறப்பானது. இந்த ரத யாத்திரை என்பது வெறும் திருவிழாவல்ல; அது அனைத்து பக்தர்களிடமும் தெய்வத்தின் வருகையை குறிக்கிறது". 

Ratha Yathirai

ரதத்தை இழுத்து கொண்டு செல்லும் போது, நாங்கள் தெய்வத்தை நமது இதயத்திற்கு அருகில் இழுக்கும் அனுபவத்தை பெறுகிறோம். இந்த திருவிழாவின் போது பக்தி, அன்பு, மற்றும் ஒற்றுமை நம்மை நினைவூட்டுகிறது" என்று ISKCON சென்னை ஈசிஆர் கோவிலின் பிரதிநிதி தெரிவித்தார்.

Tirumala Tirupati: திருப்பதியில் இந்த 2 நாட்களுக்கு விஐபி தரிசனம் ரத்து! தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு.!

Latest Videos

click me!