உங்க வேலையில் அடிக்கடி தடை ஏற்படுகிறதா? கடுகை வைத்து இந்த எளிய பரிகாரத்தை பண்ணுங்க!!

First Published | Jun 14, 2023, 12:58 PM IST

நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதில் தொடர்ந்து தடை ஏற்படுகிறதா? கடுகு பரிகாரம் செய்தால் எல்லா தடையும் நீங்கிவிடும். 

வாழ்க்கையில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு ஜோதிட சாஸ்திரம் தீர்வு சொல்லியிருக்கிறது. அதை பின்பற்றுவதன் மூலமாக பல பிரச்சனைகளை தீர்க்க முடியும். வேலையில் அடிக்கடி ஏற்படும் தடைகளை நீக்க வீட்டு சமையலறையில் பயன்படுத்தப்படும் கடுகு பயன்படுத்த வேண்டும் என்கிறது ஜோதிடம். 

கடுகு பரிகாரம் மூலம் கண் திருஷ்டியை தவிர்க்கலாம். இதனால் வீட்டிற்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரமுடியும். கடுகு பரிகாரங்களை எப்படி செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம். கடுகின் இந்த பரிகாரங்கள் எல்லா துன்பங்களையும் நீக்கும். 

Tap to resize

கண் திருஷ்டி பரிகாரம்; 

கடுகு கண் திருஷ்டியை நீக்குகிறது. உங்கள் மீது கண் திருஷ்டி இருந்தால், அதனால் உங்கள் உடல்நிலை மோசமடைந்திருந்தால் கடுகை பயன்படுத்துங்கள். இதற்கு ஏழெட்டு மிளகாய், உப்பு சேர்த்து சிறிது கடுகை கலந்து 7 முறை சுழற்றி எரியும் நெருப்பில் போடுங்கள். கண் திருஷ்டி நீங்கும். 

இதையும் படிங்க: கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்கணுமா? இந்த எளிய பரிகாரங்களை செய்தால் போதும்..

அதிர்ஷ்டம் பெருக பரிகாரம்: 

ஜோதிட சாஸ்திரத்தின்படி, பல வகையான பிரச்சனைகளுக்கு கடுகு மூலம் தீர்வு கிடைக்கும். இந்த பரிகாரம் மூலம், விலகி போன அதிர்ஷ்டமும் வந்துவிடும். நீங்கள் கடினமாக உழைத்தும் அதற்கு பலன் கிடைக்காவிட்டால், தண்ணீரில் கடுகை அந்த நீரில் குளிக்கவும். இதன் மூலம் விரைவில் வெற்றி கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும் என்பது ஐதீகம். 

வேலை தடைகள் நீங்க பரிகாரம்:

உங்கள் வேலையில் மீண்டும் மீண்டும் தடைகள் ஏற்பட்டால் நீங்கள் வியாழக்கிழமை கடுகு தானம் செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் முடிவடையும். 

இதையும் படிங்க: நீங்கள் அரசாங்க வேலைக்காக முயற்சி செய்றீங்களா? அப்போ இந்த பரிகாரத்தை ஒருமுறை மட்டும் செய்யுங்க..!!

Latest Videos

click me!