உன் பக்தன் எனக்கு மட்டும் தங்களின் திருமணத்தை காண ஆவல் இருக்காதா என கேட்டு வருத்தப்பட, இறைவனின் திருமணக் காட்சியை இந்த தலத்தில் காட்டி அருளினார். இந்த திருமணக் கோலத்தில் இருக்கும் சிவன் பார்வதியையும் முன் அகஸ்தியர் மற்றொரு சிவ லிங்கத்டை வைத்து பூஜித்து பேறு பெற்றார். இந்த கல்யாண சுந்தரேஸ்வரர் சிவ லிங்கத்திற்கு பின் இன்றும் கல்யாண சுந்தரேஸ்வரர் - பார்வதி விக்ரகத்தை காண முடியும்.
மகம் நட்சத்திரத்திர கோயில்:
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த கோயிலில் வழிபடுவது சிறப்பு. சுகப்பிரசவம் நடக்க இந்த கோயிலில் கர்ப்பிணிப் பெண்கள் வழிபாடு நடத்துகின்றனர். அதே போல் நினைத்த காரியம் சித்தி அடைய வழிபட வேண்டிய சிறப்பான கோயில் இதுவாகும். மக நட்சத்திரத்தில் ஏதேனும் பிரச்சனை கிரக தோஷங்கள் இருந்தால் இந்த கோயிலில் சென்று வழிபட்டு வந்தால் இரவில் நல்லதே நடக்கும் என்று நம்பப்படுகிறது.
நிறம் மாறும் சிவலிங்கம்:
இங்கு வில்வ மரத்தடியில் இறைவன் சுயம்புவாக தோன்றினார். பொன் நிறமாக இருக்கும் சிவலிங்கம், தினமும் வெவ்வேறு வேளைகளில் ஐந்து நிறங்களில் காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். காலையில் 6:00 மணியில் இருந்து காலை 8.24 மணியளவில் தாமிர நிறமாகவும், 8.24 மணியிலிருந்து 10.48 மணியளவில் இளஞ்சிவப்பு நிறத்திலும், 10.48 இருந்து பிற்பகல் 1.12 மணி அளவில் தங்க நிறமாகவும் 1.12 மணியிலிருந்து 3.36 வரை நவரத்தின பச்சை நிறத்திலும், மாலை 6.00 அளவில் சொல்லத் தெரியாத வர்ணத்தில் சிவபெருமான் காட்சியளிக்கிறார். இப்படி ஒரே நாளில் சிவபெருமான் 5 நிறங்களில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் காட்சி இந்த கோயிலில் மட்டுமே இருக்கிறது.