நமது இந்திய நாட்டில் பல்வேறு விதமான சாஸ்திர, சம்பிரதாயங்கஜோதிட குறிப்புகள் இருக்கின்றன. உதாரணமாக காகம் ஆனது நம் வீட்டின் முற்பகுதியில் வந்து கரைந்தால்வீட்டிற்கு விருந்தாளிகள் வருவார்கள் என்று கூறுவார்கள். காகத்திற்கு உணவு வைப்பது நம் முன்னோர்களுக்கு உணவு கொடுப்பதற்கு சமமாக கருதுவார்கள்.அந்த வகையில் பள்ளி நம் உடம்பில் விழுவதை வைத்து சில பலன்கள் கூறியுள்ளனர்.
நம் அனைவருடைய வீட்டிலும்,வசிக்கக்கூடியது தான் பல்லி. இந்த பள்ளி நாம் சற்றும் எதிர்பாரா நேரத்தில் கத்தும் அல்லது நமது உடம்பில் விழும். இப்படி நம் உடம்பில் பல்லி விழுந்தால் அதற்கு என்ன பலன்கள் என்பதனை இந்த பதிவில் விரிவாக காணலாம்.
தலையில்:
தலையில் பல்லி விழுவதால் , அது அவருக்கு இருக்கக்கூடிய கெட்ட சகுணத்தை கூறுகிறது. தவிர அவரது கெட்ட நேரத்தை சமாளிக்க வேண்டிய நிலைமையை நமக்கு எச்சரிக்கை மணியாக சொல்லுகிறது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்படி தலையில் விழுவதால் அடுத்தவர்களின் கடும் எதிர்ப்பு உண்டாகும். தவிர உறவினகள் /தெரிந்தவர்கள் போன்றோர்மரணிப்பார்கள் இதனால் கடும் மன வேதனை அடைவார்கள். இதனை போன்ற கெட்ட சகுணத்தை நமக்கு உணர்த்துகிறது.
நெற்றியில் :
பல்லி நெற்றி மீது விழுந்தால் அது நல்ல சகுணத்தை தான் குறிக்கும் . அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமாயின் இடது புறத்தில் விழுந்தால் கீர்த்தி ஏற்படும் என்றும், வலது நெற்றியில் விழுந்தால் லக்ஷ்மி கடாட்சம் உண்டாகும் என்றும் சாஸ்திரகளில் கூறப்பட்டுள்ளது.
புருவத்தில்:
பல்லி புருவத்தில் விழுந்தால், உயர் பதவியில் இருப்பவர்களிடம் இருந்து பாராட்டும் உதவியும் கிடைக்கும் என்று கூறியுள்ளது.
கண்களில்:
கண்கள் / கண்ணங்களின் மீது பல்லி விழுந்தால், ஏதோ ஒரு காரணத்திற்காக உங்களுக்கு தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று எடுத்துக் கொள்ளலாம்.
முகத்தில்:
முகத்தில் பல்லி விழுந்தால், வீட்டிற்கு உறவினர்கள் வரவிருப்பதை தெரிந்து கொள்ளலாம்.
மார்பில் பல்லி விழுந்தால் :
வலது மார்பில் பல்லி விழுந்தால் லாபம் உண்டாகும் என்றும், இடது மார்பில் விழுந்தால் சுகம் உண்டாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கழுத்தில்:
இடது பக்க கழுத்துப் பகுதியில் பல்லி விழுந்தால் காரிய வெற்றி உண்டாகும். வலது கழுத்தில் பல்லி விழுந்தால் அடுத்தவருடன் பகை உண்டாகும்.
பாதத்தில்:
பல்லி பாதத்தில் விழுந்தால், எதிர் காலத்தில், வெளிநாட்டு பயணம் செல்ல சூழிநிலைகள் உண்டாகும் என்று அர்த்தம்.
தொப்புளில் :
தொப்புளில் பல்லி விழுமாயின் காஸ்ட்லியான பொருட்களான தங்கம், வைரம்,பவளம், இரத்தினம் முதிலியவற்றை வாங்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்குமாம்.
இடது கை மற்றும் கால்:
இடது கை / இடது காலில் பல்லி விழுந்தால், அன்றைய நாள் முழுதும் மட்டற்ற மகிழ்ச்சி மற்றும் சுவாரசியமான விஷயங்கள் நடக்கும் என்பது ஐதீகம்.
வலது கை மற்றும் கால் :
வலது கை/ வலது காலில் பல்லி விழுந்தால், அன்றைய நாளில் உடல் நல குறைவு மற்றும் அசவுகரியங்கள் உண்டாக வாய்ப்புகள் ஏற்படலாம்.
தொடையில்:
பல்லி தொடைப்பகுதியில் விழுந்தால், அவர்களின் பெற்றோர் வருந்தும் அளவிற்கு ஏதோ வருத்தத்தை உண்டாக்கும் செயல் புரிவார்கள் என்று கூறும்.
பல்லி விழுந்தால் என்ன செய்ய வேண்டும்:
நமது உடம்பில் பல்லி எங்கு விழுந்தாலும், உடனே குளித்து விட்டு அருகிலுள்ள கோயிலுக்கு சென்று சுவாமியை வழிபாடு செய்யுங்கள். முடியவில்லை எனில் வீட்டிலேயே விளக்கேற்றி சுவாமியை வழிபடலாம்.
இப்படி ஒரு முறை சட்னி செய்து தான் பாருங்களேன்! எத்தனை இட்லி கொடுத்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.