நம் வீடுகளில் அலுவலகத்தில் மூங்கில் செடி வளர்ப்பது ரொம்ப நல்லது என வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஏனென்றால் மூங்கில் செடிகள் தரித்திரம் நீக்கி அதிர்ஷ்டம் தருவதோடு, வீட்டிற்கு செல்வ செளிப்பையும் அளிப்பதாக வாஸ்து சாஸ்திரம் தெரிவிக்கிறது. மூங்கில் செடியை எந்த திசையில் வைக்க வேண்டும். எப்படி வளர்த்தால் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
மூங்கில் செடி வைக்க வேண்டிய திசை..
மூங்கில் செடியை கிழக்கு மூலையில் வைக்கலாம். செல்வமும் செழிப்பும் ஈர்க்க நினைத்தால் மூங்கில் செடியை தென்கிழக்கு மண்டலத்தில் வைக்கலாம். இந்த திசையில் வைத்திருந்தால், நிதி இடையூறுகளிலிருந்து விடுபட்டு, செல்வத்தைப் பெற முடியும் என்று நம்பப்படுகிறது.
மூங்கில் தண்டுகளின் எண்ணிக்கையை பொறுத்து நமக்கு பலன் கிடைக்கிறது. வாஸ்துவின்படி, மூங்கில் குச்சிகள் 2 வைத்து வளர்த்தால் காதல், திருமண வாழ்க்கைக்கு நல்லது. 3 மூங்கில் குச்சிகள் என்றால் மகிழ்ச்சி கிடைக்கும். 5 மூங்கில் தண்டுகள் இருப்பின் ஆரோக்கியம் மேம்படும். 8 வைத்து வளர்க்கும்போது செல்வம் பெருகும். 9 என்றால் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
மூங்கில் செடி பராமரிப்பு
மூங்கில் செடிகள் காற்று சுத்திகரிப்பானாகவும், சுற்றுப்புறங்களிலிருந்து மாசுக்களை அகற்றவும் உதவுகின்றன. இவை இரண்டு முதல் மூன்று அடி உயரத்திற்கு வளரும். பராமரிக்கவும் எளிதானது. மூங்கில் செடியை நேரடியாக சூரிய ஒளியில் வைப்பதைத் தவிர்க்கவும். கண்ணாடி கொள்கலனில் வைக்கலாம். இதனால் வேர்கள் தெரியும். மூங்கில் செடியை வைக்கும் கண்ணாடி தொட்டியில் மண், உலோகம், மரம், நீர், நெருப்பு ஆகிய ஐந்து கூறுகளும் போட வேண்டும். அது எப்படி என்கிறீர்களா? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம். பானையில் கூழாங்கற்கள், சில நாணயங்கள், மூங்கில் செடி, தண்ணீர், சிவப்பு ரிப்பன்/ பேண்ட் கொண்டு மூங்கில் செடியை கட்டிக் கொள்ளலாம். இதில் 5 கூறுகளும் அடங்கிவிட்டன.
இதையும் படிங்க: வீட்டிற்கு இந்த உயிரினங்கள் வருகிறதா? அப்போ நிச்சயம் செய்வினை இருக்கு!! கவனமாக இருங்க!!
வீட்டிலும், பணி செய்யும் இடங்களிலும் மூங்கில் செடிகளை வைத்திருப்பது காற்றை சுத்தமாக வைத்திருக்கும். மன அமைதியை தரும். நல்ல அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் அள்ளி கொடுக்கும். மூங்கில் பசுமையாக இருக்க அதிகமாக நீரூற்ற தேவையில்லை. தண்ணீரில் நட்டு வைத்திருந்தால்வேர்கள் தண்ணீரில் மூழ்கியிருக்க வேண்டும். மண்ணில் நட்டு வைத்திருந்தால் எப்போதும் ஈரமாக இருக்க வேண்டும். ஆனாலும், ரொம்ப தண்ணீர் விடாதீர்கள்.
மூங்கில் செடி வைக்கும் முன் கவனம்:
மஞ்சள் அல்லது அடர் பச்சை நிற தண்டுகளை உடைய மூங்கில் செடியை வைக்க வேண்டாம். அதிக இயற்கை தாதுக்கள் கொண்ட குழாய் நீர் மட்டும் ஊற்றுங்கள். ஒவ்வொரு வாரமும் அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை புதிய தண்ணீரை மாற்றி வைக்கவும். முறையாக பராமரித்தால் தான் அலுவலகத்திற்கும், வீட்டிற்கும் நேர்மறை ஆற்றலையும் வளர்ச்சியையும் தரும். அதில்
பூச்சிகளைத் தவிர்ப்பதற்கு, ஒரு மாதத்திற்கு ஒரு முறை உரத்தைப் பயன்படுத்தலாம். நல்ல பலன் கிடைக்கும்.
இதையும் படிங்க: வாழவே விடாத ஏழு ஜென்ம பாவம் கூட விலக.. வெறும் 1 கைப்பிடி அரிசி வைத்து எளிய பரிகாரம்!