ஆடி இந்த மாதத்தின் 17ஆம் தேதி தொடங்குகிறது. இந்நாளில் சூரியன் மிதுன ராசியிலிருந்து சந்திரனை அதிபதியாக கொண்ட கடக ராசிக்கு பெயர்ச்சியடைகிறது. அதே நாளில் சூரியனை அதிபதியாக கொண்ட சிம்ம ராசிக்கு சந்திரன் மாறுகிறார். இதனால் இந்த இரு கிரகங்களும் ராசிகளை பரிமாறி கொள்ளக்கூடிய பரிவர்த்தனை யோகம் உருவாகிறது. சூரியன் கடக ராசிக்கு மாறக்கூடிய நேரத்தில் உருவாகும் ஆடி மாதத்தில், சிம்ம ராசியில் இருப்பதால், சந்திரனிலிருந்து மூன்றாவது, ஆறாவது, பத்தாம் மற்றும் 11ஆம் வீட்டில் அமைந்திருக்கும் கிரகங்களை சேர்ந்த ராசியினருக்கு மிகவும் சாதகமான பலன்களை தரப்போகிறார். இதில் எந்தெந்த ராசிகள் அதிக பலன்களை பெறப்போகிறது என்பதை இங்கு பார்க்கலாம்.