இந்து மதத்தில் பித்ரு பட்சம் மிகவும் முக்கியமானது. பித்ரு பட்சயத்தின் போது நமது முன்னோர்கள் பூமிக்கு வந்து 15 நாட்கள் தங்கியிருப்பதால், அவர்களுக்கு சில சடங்குகளை செய்வது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மேலும் வீட்டின் திசைகளும் முன்னோர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டவை என்று பலருக்குத் தெரியாது. இதற்கு சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். பித்ரோ தோஷம் இருந்தால், நோய், நிதி பிரச்சனைகள் என பல பிரச்சனைகள் வரலாம். வாஸ்து படி உங்கள் வீட்டில் இருக்கும் பித்ருதோஷத்தை நீக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் மற்றும் வீட்டில் என்னென்ன விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.
உங்கள் முன்னோர்கள் புகைப்படம் இந்த திசையில் இருக்க வேண்டும்:
வீட்டில் திசைகளுக்கும் சிறப்பு முக்கியத்துவம் உண்டு. வாஸ்து சாஸ்திரத்தின் படி, தெற்கு திசை மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த எமனுடையது என்று நம்பப்படுகிறது. எனவே, இந்த திசையில் முன்னோர்களின் புகைப்படங்களை வைப்பது பொருத்தமாகும். குறிப்பாக புகைப்படத்தை வைக்கும் போது, அவர்களின் முகம் தெற்கு திசை நோக்கியும், புகைப்படம் வடக்கு திசையில் சுவரில் வைக்க வேண்டும்.
இங்கு வைக்காதீர்கள்:
உங்கள் வீட்டின் படுக்கையறையில் மறந்தும் கூட உங்கள் முன்னோர்களின் புகைப்படங்களை வைக்க வேண்டாம். வாஸ்து சாஸ்திரப்படி இந்த இடத்தில் புகைப்படத்தை வைத்தால் வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும்.
முன்னோர்களின் ஆசி கிடைக்க:
15 நாட்கள் நடைபெறும் பித்ரு பட்சம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது. இது தவிர முன்னோர்களை அவ்வப்போது நினைவு கூறுவது மிகவும் நல்லது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, இவ்வாறு செய்தால் முன்னோர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இதனால் அவர்களின் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். மேலும் குடும்பத்தில் உள்ளவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் இருக்கும் என்பது மத நம்பிக்கை.