மூன்றெழுத்து மந்திரத்திற்காக எச்சில் இலையை எடுத்த புஸ்ஸி! அடிமட்ட தொண்டனாய் மாறிய பொதுச்செயலாளர்!

Published : Jul 20, 2025, 03:23 PM ISTUpdated : Jul 20, 2025, 03:43 PM IST

Bussy Anand Who Took Saliva Leaf For Thalapathy Viay in Tamil : விஜய் என்ற 3 எழுத்து மந்திரத்திற்காக தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த எச்சில் இலையை எடுத்து தான் ஒரு அடிமட்ட தொண்டன் தான் என்பதை நிரூபித்துள்ளார்.

PREV
17
எச்சில் இலை எடுத்த புஸ்ஸி ஆனந்த்

N Anand Who Took Saliva Leaf For Thalapathy Viay in Tamil : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய் தமிழக மக்களின் நலனுக்காக அரசியலில் கால் பதித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கிய தளபதி விஜய் விக்கிரவாண்டியில் தனது முதல் அரசியல் மாநாட்டையும் வெற்றிகரமாக முடித்தார்.

27
விஜய் மற்றும் புஸ்ஸி ஆனந்த்

இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடைபெறும் குற்ற சம்பவங்களுக்கு எதிராக குரல் கொடுப்பது களத்தில் இறங்கி போராடுவது என்று தனது அரசியல் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அரசியல் வருகையைத் தொடர்ந்து இனிமேல் சினிமாவிலும் நடிக்கமாட்டேன் என்று கூறிய விஜய் தற்போது தனது கடைசி படம் என்று சொல்லப்படும் ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார்.

37
தமிழக வெற்றிக் கழகம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்

இந்தப் படம் வரும் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட முடிந்த நிலையில் விஜய் தனது 2ஆவது அரசியல் மாநாட்டிற்காக தயாராகி வருகிறார். வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆவது அரசியல் மாநாடு நடைபெற இருக்கிறது. இதற்காக பந்தக்கால் நடும் நிகழ்ச்சியும் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.

47
புஸ்ஸி என் ஆனந்த்

விஜய்யின் அரசியல் பயணத்திற்கு அவருக்கு பக்க பலமாக இருப்பது பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த். நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தபோது, ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி "தமிழக வெற்றிக் கழகம்" எனப் பெயரிட்டார். அப்போதிருந்து புஸ்ஸி என். ஆனந்த் இந்த இயக்கத்தின் தலைவராகவும், தற்போது கட்சியின் பொதுச் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார்.

57
தமிழக வெற்றிக் கழகம் - விஜய் அண்ட் புஸ்ஸி ஆனந்த்

விஜய் மக்கள் இயக்கத்தில் நீண்ட காலமாகப் பயணித்து, விஜயின் அரசியல் செயல்பாடுகளில் முக்கியப் பங்காற்றி வருகிறார். குறிப்பாக, விஜயின் மக்கள் நலப் பணிகளை ஒருங்கிணைப்பது, ரசிகர் மன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது போன்றவற்றில் இவர் புஸ்ஸி ஆனந்தின் பங்கு அதிகம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

67
டிவிகே பொதுச் செயலாளர்

கண் அசைவை சிக்னலாக எடுத்துக் கொண்டு செயல்பட்டு வரும் புஸ்ஸி ஆனந்த் இன்று ஒரு படி மேல் சென்று விஜய் என்ற மூன்றெழுத்து மந்திரத்திற்காக எச்சில் இலை எடுக்கும் அடிமண்ட தொண்டன் அளவிற்கு சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

77
எச்சில் இலை எடுத்த புஸ்ஸி ஆனந்த்

இந்த நிலையில் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. இதில், நிர்வாகிகளுக்கு சாப்பாடும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது புஸ்ஸி ஆனந்த் தான் ஒரு கழகத்தின் பொதுச்செயலாளர் என்பதையெல்லாம் மறந்து கட்சியின் அடிமட்ட தொண்டனாக விஜய்யின் உண்மை விசுவாசியாக நிர்வாகிகள் சாப்பிட்ட எச்சில் இலையை எடுப்பது, உணவு பரிமாறுவது போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை தமிழச்சி டிவிகே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவைத்தான் இப்போது பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories