'பிகில்' படத்தில் விஜய்க்கு டூப் போட்டது இந்த இளம் நடிகரா? 10 மாதத்திற்கு பின் புகைப்படத்தோடு வெளியான ரகசியம்!

First Published | Aug 27, 2020, 6:30 PM IST

நடிகர் விஜய் நடித்த, பிகில் படத்தில் அவருக்கு டூப் போட்டது இளம் நடிகர் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், விஜய் மூன்றாவது முறையாக இணைந்து நடித்த திரைப்படம் 'பிகில்'.
பெண்கள் கால் பந்து விளையாட்டை மையமாக வைத்து, எடுக்கப்பட்ட இந்த படம்... கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது.
Tap to resize

இந்த படத்தில் விஜய் மைக்கல் ராயப்பன், பிகிலு என்கிற இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
அப்பா விஜய் - மகன் விஜய் என இருவரும் சேர்ந்து நடித்த காட்சிகள் கிராபிக் மூலம் எடுக்கப்பட்டாலும், ஒரு சில காட்சிகளை டூப் போட்டு படமாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், விஜய்க்கு டூப் போட்ட இளம் நடிகர் ஸ்ரீ ராம், முதல் முறையாக இது குறித்த புகைப்படங்களை வெளியிட இந்த ரகசியம் 10 மாதங்களுக்கு பின் வெளியாகியுள்ளது.
இரண்டு விஜய்யும் அமர்ந்து பேசும் காட்சியை அவர் வெளியிட்டுள்ளார்.
கடந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார்.
மேலும் மிக பெரிய நட்சத்திர கூட்டத்தையே இந்த படத்தில் ஒன்று திரட்டி பிரமிக்க வைத்தார் அட்லீ என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!