
கோலிவுட்டின் சென்சேஷனல் ஹீரோவாக வலம் வருபவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தொட்டதெல்லாம் ஹிட்டாகி வருகின்றன. இதுவரை மூன்று படங்களில் நடித்திருக்கிறார். மூன்றுமே 100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்துள்ளன. இதனால் அவரது படங்கள் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அவர் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, கெளரி கிஷான், சீமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
நடிகை நயன்தாரா தன்னுடைய ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை செவன் ஸ்கிரீன் லலித் குமார் உடன் இணைந்து தயாரித்திருக்கிறார். அனிருத் இசையமைத்துள்ளதால் இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்துள்ளன. இப்படத்திற்கு லெஜண்டரி ஒளிப்பதிவாளரான ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இது ஒரு ரொமாண்டிக் ஃபேண்டஸி திரைப்படம். இப்படத்தை முதலில் சிவகார்த்திகேயனை வைத்து எடுப்பதாக இருந்தார் விக்னேஷ் சிவன். ஆனால் அது டேக் ஆஃப் ஆகாததால், பிரதீப் ரங்கநாதனை வைத்து எடுத்து ஒருவழியாக ரிலீஸ் செய்துள்ளார். இப்படத்தின் முதல் காட்சி பார்த்த நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் தங்கள் விமர்சனங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதனை பார்க்கலாம்.
எல்.ஐ.கே, 2040ம் ஆண்டு பேக் டிராப்பில் உருவாகி இருக்கும் படம். பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா மோதல் காட்சி, கீர்த்தி ஷெட்டி இண்ட்ரோ காட்சி, நண்பர் யோகிபாபு காமெடி, ஆனந்தராஜின் ஒன்லைன் காமெடிகள், சோசியல் மீடியா சமாச்சாரங்கள், கலர்ஃபுல்லான விஷுவல், அனிருத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ஆகியவை அருமையாக உள்ளன. நம்பத்தாகதவையாக இருந்தாலும், விக்னேஷ் சிவனின் நரேஷன், படத்தை நகைச்சுவையாக கொண்டு செல்கிறது என பதிவிட்டுள்ளார்.
எல்.ஐ.கே திரைப்படம், ஒரு சுவாரஸ்யமான கான்செப்டும், எதிர்காலத்தை மையமாகக் கொண்ட அமைப்பும் கொண்ட ரொமான்டிக்-காமெடி படம் இது. ஆனால் அதை எடுத்த விதம் எதிர்பார்த்த அளவுக்கு திருப்தி அளிக்கவில்லை. படத்தின் முக்கிய பலம் அதன் எதிர்கால உலக அமைப்பு. சில நேரங்களில் அது மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றினாலும், முதல் பாதியில் சில சுவாரஸ்யமான தருணங்களை உருவாக்குகிறது. கான்செப்ட் புதுமையாகவும், நல்ல வாய்ப்புகள் கொண்டதாகவும் இருந்தாலும், அதை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை.
இரண்டாம் பாதியில் கதையின் பலவீனம் தெளிவாக தெரிகிறது. கதை முன்னேறாமல் நீள்கிறது என்ற உணர்வு வருகிறது. பிரதீப் ரங்கநாதன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா சம்பந்தப்பட்ட சில நகைச்சுவை காட்சிகள் மட்டும் சிறிதளவு ஒர்க் அவுட் ஆகி இருக்கின்றன; ஆனால் அது முழு படத்தை தாங்க போதுமானதாக இல்லை. தயாரிப்பு தரம் மிகவும் உயர்ந்ததாக உள்ளது. சில இடங்களில் மட்டும் ரசிக்க வைக்கும் இந்த படம், மொத்தத்தில் சராசரிக்கும் கீழே தான் உள்ளது என குறிப்பிட்டு உள்ளார்.