Octopus Review : அடிபொலியாக உள்ளதா ஆக்டோபஸ் வெப் சீரிஸ்? முழு விமர்சனம் இதோ

Published : Nov 25, 2026, 01:02 PM IST

Octopus Web Series Review : ஜெயச்சந்திரா ஹாஸ்மி இயக்கத்தில் அஷ்வின் குமார் மற்றும் அர்ச்சனா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகி உள்ள ஆக்டோபஸ் வெப் சீரிஸ் எப்படி இருக்கிறது என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.

PREV
15
Octopus Web Series Review

தமிழில் சமீபகாலமாக வெப் தொடர்களுக்கான ரசிகர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கிரைம், மர்மம் மற்றும் சஸ்பென்ஸ் கதைகளுக்கு ஓடிடி தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் வெப் தொடர்தான் ‘ஆக்டோபஸ்’. பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் அர்ச்சனா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த வெப் தொடர் நவம்பர் 27ந் தேதி முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. அதன் விமர்சனத்தை பார்க்கலாம்.

25
ஆக்டோபஸ் வெப் தொடரின் கதை என்ன?

விழுப்புரத்தில் உள்ள ராம்நகர் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு சிறிய குடியிருப்பைச் சுற்றியே இந்தத் தொடரின் கதை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஐந்தாறு குடும்பங்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல ஒற்றுமையுடனும் அன்புடனும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்குள் இருக்கும் நெருக்கமான உறவுகளுக்கு மத்தியில் புதிதாக ஒரு தம்பதி குடியேறுகின்றனர். அவர்களின் வருகைக்குப் பிறகு அந்தக் குடியிருப்பில் அடுத்தடுத்து பல எதிர்பாராத சம்பவங்கள் அரங்கேறத் தொடங்குகின்றன.

புதிதாக வந்த கணவன் தனது மனைவியிடம் மிகவும் மோசமாக நடந்துகொள்வதுடன், அவரை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்துகிறான். மற்றவர்களுடன் மனைவி பேசிப் பழகுவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கிறான். இப்படி நாட்கள் நகரும் சூழலில், ஒரு கட்டத்தில் அந்தப் பெண் திடீரென மாயமாகிறார். அவர் எங்கு சென்றார்? அவருக்கு என்ன நடந்தது? அவர் காணாமல் போனதற்குப் பின்னால் இருப்பது என்ன? எனப் பல கேள்விகளுடன் மர்மத்தை நோக்கி கதை பயணிக்கிறது.

35
அடுத்தடுத்து வரும் திருப்பங்கள்!

பொதுவாக மர்மம் மற்றும் சஸ்பென்ஸ் வெப் தொடர்களில் ஒரே மாதிரியான கதை சொல்லும் பாணியைப் பார்க்க முடியும். ஆனால், ‘ஆக்டோபஸ்’ அந்த வழக்கமான பாணியிலிருந்து சற்று விலகி, கதாபாத்திரங்களையும் அவர்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்களையும் சுவாரஸ்யமாக இணைத்திருக்கிறது.

குறிப்பாக, ஒவ்வொரு சம்பவத்திற்குப் பின்னாலும் புதிய சந்தேகங்களையும் கேள்விகளையும் உருவாக்கும் திரைக்கதை பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஒரு மர்மத்திற்கான விடை கிடைக்கும் நேரத்தில் மற்றொரு எதிர்பாராத திருப்பம் வருவது தொடரின் விறுவிறுப்பை அதிகரிக்கிறது.

இதில் திரில்லர் அம்சங்களுடன் சிறிய அளவிலான நீதிமன்றக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த கோர்ட் டிராமா கதைக்கு புதுவிதமான சுவாரஸ்யத்தைச் சேர்க்கிறது. அதேபோல், பதற்றமான காட்சிகளுக்கு நடுவே இடம்பெறும் நகைச்சுவை தருணங்களும் ரசிக்க வைக்கின்றன. மர்மத்தையும் பொழுதுபோக்கையும் சரியான அளவில் கலந்து கொடுத்திருப்பது தொடரின் சிறப்பம்சமாக உள்ளது.

45
ஆக்டோபஸ் விமர்சனம்

இந்தத் தொடரில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர். குறிப்பாக, அஷ்வின் குமார் மற்றும் அர்ச்சனா ரவிச்சந்திரன் ஆகியோரின் நடிப்பு கதையின் முக்கியமான உணர்வுப்பூர்வமான தருணங்களுக்கு வலு சேர்க்கிறது. மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் தங்களது நடிப்பின் மூலம் கதைக்கு நம்பகத்தன்மையை உருவாக்கியுள்ளனர்.

தொழில்நுட்ப அம்சங்களைப் பொறுத்தவரை, ‘ஆக்டோபஸ்’ தொடரின் பின்னணி இசை முக்கியமான பலமாக அமைந்துள்ளது. தீபன் சக்ரவர்த்தியின் இசை மர்மம் நிறைந்த காட்சிகளுக்கு கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கிறது. குறிப்பாக, அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை உருவாக்கும் இடங்களில் பின்னணி இசை சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவாளர் கண்ணா ஆர் இரவு நேரக் காட்சிகளை நேர்த்தியாகப் படமாக்கியுள்ளார். இருள் சூழ்ந்த இடங்கள், அதற்கேற்ற ஒளியமைப்பு மற்றும் காட்சிகளின் பின்னணித் தேர்வு ஆகியவை தொடரின் திகில் கலந்த மர்ம உணர்வை அதிகரிக்கின்றன. படத்தொகுப்பும் கதையின் வேகத்தைத் தக்கவைக்க உதவுகிறது.

55
‘ஆக்டோபஸ்’ எப்படி இருக்கு?

வழக்கமான திரில்லர் கதைகளிலிருந்து சற்று மாறுபட்டு, மர்மம், சஸ்பென்ஸ், நகைச்சுவை மற்றும் நீதிமன்ற விசாரணை எனப் பல அம்சங்களை ஒன்றாக இணைத்து உருவாக்கப்பட்டுள்ள வெப் தொடராக ‘ஆக்டோபஸ்’ அமைந்துள்ளது. அடுத்தடுத்து நிகழும் திருப்பங்கள், நடிகர்களின் பங்களிப்பு மற்றும் வலுவான பின்னணி இசை ஆகியவை தொடரைப் பார்க்கத் தூண்டும் அம்சங்களாக உள்ளன. குறிப்பாக, ஆரம்பம் முதல் இறுதிவரை மர்மக் கதைகளையும் எதிர்பாராத திருப்பங்களையும் ரசிப்பவர்களுக்கு ‘ஆக்டோபஸ்’ ஒரு சுவாரஸ்யமான தேர்வாக இருக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories