ரிவால்வர் ரீட்டா விமர்சனம்... கீர்த்தி சுரேஷ் கம்பேக் கொடுத்தாரா? கடுப்பேற்றினாரா?

Published : Nov 28, 2025, 09:44 AM IST

சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார், ரெடின் கிங்ஸ்லி, செண்ட்ராயன் நடிப்பில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி இருக்கும் ரிவால்வர் ரீட்டா திரைப்படத்தின் எக்ஸ் தள விமர்சனத்தை பார்க்கலாம்.

PREV
15
Revolver Rita Twitter Review

வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28, பார்டி, மாநாடு உட்பட பல ஹிட் படங்களில் இணை எழுத்தாளராக பணியாற்றியவர் தான் சந்துரு, இவர் “நவீன சரஸ்வதி சபதம் என்கிற படத்தையும் இயக்கி இருக்கிறார். அப்படத்திற்குப் பிறகு அவர் இயக்கத்தில் உருவாக்கியுள்ள இரண்டாவது திரைப்படம் தான் ரிவால்வர் ரீட்டா. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வித்தியாசமான கமர்ஷியல் படமாக இது உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

25
ரிவால்வர் ரீட்டா

மேலும் இப்படத்தில், ராதிகா சரத்குமார், சுனில், சூப்பர் சுப்பராயன், ரெடின் கிங்ஸ்லி, அஜய் கோஷ், ஜான் விஜய், சுரேஷ் சக்ரவர்த்தி, கல்யாண் மாஸ்டர், கதிரவன், அகஸ்டின், செண்ட்ராயன், பிளேடு சங்கர், குஹாசினி, ராமச்சந்திரன் அக்ஷதா அஜித், காயத்ரி ஷான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை, பெரும் பொருட்செலவில் தி ரூட் நிறுவனத்தின் சார்பில் ஜகதீஷ் பழனிச்சாமி மற்றும் பேசன் ஸ்டூடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. இதன் எக்ஸ் தள விமர்சனத்தை பார்க்கலாம்.

35
ரிவால்வர் ரீட்டா ட்விட்டர் விமர்சனம்

ரிவால்வர் ரீட்டா, ஒரு நல்ல டார்க் காமெடி திரைப்படம். சில மணிநேரம் நடக்கும் கதைக்களத்துடன் பாண்டிச்சேரியை பின்னணியாக கொண்டு இந்த கதை உருவாக்கப்பட்டு உள்ளது. விசித்திரமான கதாபாத்திரங்களால் காமெடி ஒர்க் ஆகி இருக்கிறது. கீர்த்தி சுரேஷ் ஒட்டுமொத்த படத்தையும் தன்னுடைய தோளில் தாங்கி இருக்கிறார். அவரின் காமெடி டைமிங் அருமை. அதேபோல் ராதிகாவின் காமெடியும் வேறலெவல். சூப்பர் சுப்பராயன், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் கதாபாத்திரங்கள் படத்திற்கு பிளஸ் ஆக அமைந்துள்ளது. குடும்பங்களுக்கான ஒரு படமாக இதை கொடுத்துள்ளார் இயக்குநர் சந்துரு என பதிவிட்டுள்ளார்.

45
ரிவால்வர் ரீட்டா ரிவ்யூ

ரிவால்வர் ரீட்டா படத்தில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய ஷார்ப் ஆன டைமிங் காமெடிகளாலும், ஸ்கிரீன் பிரசன்ஸாலும் மிரட்டி இருக்கிறார். அவரின் நடிப்பு அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகரும் போது ஸ்மூத் ஆகவும், கவனம் ஈர்க்கும் வகையிலும் அமைந்துள்ளது. மொத்தத்தில் இந்த ரிவால்வர் ரீட்டா ஒட்டுமொத்தமாக கீர்த்தியின் ஒன் மேன் ஷோ என குறிப்பிட்டு இருக்கிறார்.

55
ரிவால்வர் ரீட்டா எக்ஸ் தள விமர்சனம்

ரிவால்வர் ரீட்டா திரைப்படம் ஒரு நாளில் நடக்கும் ஒரு டார்க் காமெடி ஆக்‌ஷன் த்ரில்லர் படம். கீர்த்தி சுரேஷ் முழு படத்தையும் தன் தோளில் சுமந்து செல்கிறார். ராதிகாவும் சிறப்பாக நடித்துள்ளார். இரண்டாம் பாதியில் வரும் நகைச்சுவை காட்சிகளில் ஒன்று பிரமாதமாக இருக்கிறது. நகைச்சுவை தருணங்களுடன் சில திருப்பங்களும் உள்ளன. இப்படம் ஒரு வித்தியாசமான முயற்சி என பதிவிட்டுள்ளார்.

பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு ரிவால்வர் ரீட்டா படத்தை பார்த்த பின்னர் எக்ஸ் தள பக்கத்தில் போட்டுள்ள பதிவில், ஓடவும் முடியல; ஒளியவும் முடியல... சத்யம் தியேட்டர்ல மாட்டிக்கிட்டு... என பதிவிட்டு இருக்கிறார்.

Read more Photos on
click me!

Recommended Stories