காட்சிகளும், ஒலி வடிவமைப்பும், படத்தொகுப்பும் இந்தப் படத்தை திரையரங்கில் கட்டாயம் பார்க்க வேண்டிய அனுபவமாக மாற்றுகின்றன. முஜீப் மஜீத்தின் பின்னணி இசையும், சூரஜ் இ.எஸ்-இன் படத்தொகுப்பும் பார்வையாளர்களுக்குச் சிறந்த திரையரங்க அனுபவத்தை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. சந்தீப், வினீத், நரேன், அசோகன், பினு பப்பு, ஸஹீர் முகமது என ஒவ்வொருவரின் நடிப்பும் படத்தின் முதுகெலும்பாக உள்ளது. சௌரவ் சச்தேவ், பியானா மோமின், சிம் ஷிஃபீ ஆகியோரின் நடிப்பு அருமை. வினீத் மற்றும் நரேன், தாங்கள் முன்பு செய்த கதாபாத்திரங்களின் சாயல் துளியும் இல்லாமல் நடித்திருக்கிறார்கள்.
கிஷ்கிந்தாகாண்டம் படத்திற்குப் பிறகு மம்முட்டி அல்லது மோகன்லாலுடன் அடுத்த படம் செய்வார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், எக்கோ செய்தால் தனது கிராஃப் உயரும் என நம்புகிறேன்' என்று பட வெளியீட்டிற்கு முன்பு இயக்குநர் டின்ஜித் அய்யத்தான் கூறியிருந்தார். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. கிஷ்கிந்தாகாண்டம் பார்த்த ரசிகர்களை எக்கோ ஏமாற்றாது.