விக்ரணன் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா நடிப்பில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி இருக்கும் மாஸ்க் என்கிற ஹெய்ஸ்ட் திரில்லர் திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ப்ளெடி பெக்கர், கிஸ் என தொடர்ச்சியாக இரண்டு பிளாப் படங்களை கொடுத்துள்ள கவின், ஹிட் குடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்த சூழலில் அவர் ரிலீஸ் செய்துள்ள திரைப்படம் தான் மாஸ்க். இப்படம் வெற்றிமாறன் கண்காணிப்பில், ஆண்ட்ரியா தயாரிப்பில் உருவாகி இருப்பது படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. இப்படத்தை விக்ரணன் என்கிற புதுமுக இயக்குநர் இயக்கி உள்ளார். இப்படத்தில் கவின் உடன் ஆண்ட்ரியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
24
மாஸ்க் திரைப்படம்
மாஸ்க் திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 400க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியாகி உள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் ஷோ பார்த்த ரசிகர்கள் தங்கள் எக்ஸ் தள பக்கத்தில் விமர்சனங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். டிரைலரும் படத்தின் மீது ஒரு எதிரிபார்ப்பை உருவாக்கி வைத்திருக்க, படம் கவினை மீண்டும் வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றதா? இல்லையா? என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
34
மாஸ்க் ட்விட்டர் விமர்சனம்
மாஸ்க் படத்திற்கு கவினின் நடிப்பு பலம். ஆண்ட்ரியா மற்றும் அவரின் கேங் காட்சிகள் செயற்கையாக இருக்கிறது. வினோத் நடிப்பு அருமை. ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு பக்கபலமாக உள்ளது. மோகன் காமெடி விழுந்து விழுந்து சிரிக்கலாம். இடைவேளை மோதல் காட்சி நன்றாக உள்ளது. டயலாக்குகள் அருமை. டார்க் காமெடி ஒர்க் ஆகவில்லை. வழக்கமான கதை தான். மந்தமான திரைக்கதையால் காமெடி கம்மியாக இருந்ததோடு, ஹெயிஸ்ட் த்ரில்லருக்கான எந்த ஒரு பதற்றமான காட்சியும் இல்லை. மொத்தத்தில் மாஸ்க் ஒரு ஆவரேஜ் திரைப்படம் தான் என பதிவிட்டு உள்ளார்.
மாஸ்க் ஒரு இறுக்கமான த்ரில்லர் திரைப்படம், அதன் தீவிரமான கதைக்களம் மற்றும் அனைவரின் பவர்ஃபுல்லான நடிப்பால் பார்வையாளர்களை கவர்கிறது. இயக்கம் ஷார்ப் ஆக உள்ளது, மேக்கிங் சிறப்பாக உள்ளது. இது கட்டாயம் பார்க்க வேண்டிய படம். மிஸ் பண்ணிடாதீங்க என குறிப்பிட்டுள்ளார். ஒரு சிலர் பாசிடிவ் ரிவ்யூ கொடுத்து வந்தாலும் பெரும்பாலானோர் இப்படம் ஆவரேஜ் ஆக உள்ளது என்றே பதிவிட்டு வருகின்றனர். இதனால் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் எந்த அளவுக்கு சோபிக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.