GV Prakash Blackmail : மு.மாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்துள்ள ப்ளாக்மெயில் திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
ஜிவி பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்துள்ள படம் ப்ளாக்மெயில். இப்படத்தை மு மாறன் இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன்னர் இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் ஜிவி பிரகாஷ் உடன் பிந்து மாதவி, ரமேஷ் திலக், ஸ்ரீகாந்த், தேஜு அஸ்வினி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை கோகுல் பெனாயின் மேற்கொண்டிருக்கிறார். த்ரில்லர் கதையம்சம் கொண்ட இப்படம் செப்டம்பர் 12ந் தேதியான இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி இருக்கிறது. அதன் ட்விட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
24
ப்ளாக்மெயில் ட்விட்டர் விமர்சனம்
கோவையில் நடக்கும் கடத்தல் கதை. படத்தின் பலமே டுவிஸ்ட். ஆரம்பம் முதல் கடைசிவரை அவ்வளவு டுவிஸ்ட். திரைக்கதை செம விறுவிறுப்பு. ஜி.வி.பிரகாஷ், பிந்துமாதவி, அந்த குழந்தை, ஸ்ரீகாந்த் நடிப்பு அருமை. ஹீரோ ஜி.வி பிரகாஷ், ஸ்ரீகாந்த், ரமேஷ்திலக், லிங்கா, ஷாஜி நடிப்பு, பிந்துமாதவி கேரக்டர், பரபர சீன் படத்துக்கு பலம். கடத்தல் கதை போரடிக்காமல் விறுவிறுப்பாக செல்கிறது. ஓவர் சினிமாதனம், பில்டப் இல்லாமல், டுவிஸ்ட்களுடன் நல்ல திரைக்கதை எழுதி இருக்கிறார் இயக்குனர் மு.மாறன் என குறிப்பிட்டுள்ளார்.
34
ப்ளாக்மெயில் படம் எப்படி இருக்கு?
ப்ளாக்மெயில் ஏராளமான எதிர்பாராத திருப்பங்கள் உடன் கூடிய ஒரு அதிரடியான, நெகிழ்ச்சியூட்டும் ஹைப்பர்-லிங்க் த்ரில்லர் திரைப்படம். ஜிவி பிரகாஷ் அருமையாக நடித்துள்ளார். தேஜு அஸ்வினி, ரமேஷ் திலக் மற்றும் பிந்து மாதவி ஆகியோரின் நடிப்பும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. சாம் சி.எஸ் பின்னணி இசை வெறித்தனமாக உள்ளது. இயக்குனர் மு மாறன் தரமான த்ரில்லர் படங்களுக்கான தனது நற்பெயரைத் தக்கவைத்திருக்கிறார். கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய த்ரில்லர் படம் என பதிவிட்டுள்ளார்.
மிகவும் விறுவிறுப்பான த்ரில்லர் படம் தான் இந்த ப்ளாக்மெயில். இரவுக்கு ஆயிரம் கண்கள் மற்றும் கண்ணை நம்பாதே படங்களை இயக்கிய இயக்குனர் மு. மாறன், பத்து வெவ்வேறு கதாபாத்திரங்களை ஓர் இடத்தில் இணைக்கும் ஒரு கடத்தல் த்ரில்லருடன் மீண்டும் வந்துள்ளார். படத்தில் நிறைய நெகடிவ் கதாபாத்திரங்கள் உள்ளன, இது ஜிவி பிரகாஷின் சமீபத்திய சிறந்த படங்களில் ஒன்றாகும், அவருக்கு மிகச் சிறந்த வேடம் கிடைத்திருக்கிறது. ஸ்ரீகாந்த், ரமேஷ் திலக், பிந்து மாதவி மற்றும் லிங்கா அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். கோகுல் பெனாயின் கேமராவொர்க் படத்தை அதன் நிலையிலிருந்து உயர்த்துகிறது. இந்தப் படம் த்ரில்லர் வகை ரசிகர்களுக்கு பிடிக்கும், இடைவேளைக்கு முந்தைய காட்சிகள் படத்தின் சிறந்த பகுதியாகும், அவை நன்றாக ஒர்க் ஆகி இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.