Gatta Kusthi 2 Review : ஃபேமிலி ஆடியன்ஸுக்கு ட்ரீட்டா? வேட்டா? கட்டா குஸ்தி 2 விமர்சனம்!

Published : Jul 03, 2026, 09:44 AM IST

Gatta Kusthi 2 Full Movie Review : செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லெட்சுமி ஆகியோர் நடித்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
14
Gatta Kusthi 2 Movie Review

2022-ல் வெளியான 'கட்டா குஸ்தி' ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது அதன் தொடர்ச்சியாக வந்திருக்கும் 'கட்டா குஸ்தி 2', முதல் பாகம் கொடுத்த அந்த ஃபீலை கொடுத்ததா? இல்லையா? வாங்க பார்க்கலாம்.

இந்த முறை கதை திருமண வாழ்க்கையின் அடுத்த கட்டத்தில் இருந்து தொடங்குகிறது. குஸ்தி வீராங்கனையாக இருக்கும் ஐஸ்வர்யா லெட்சுமி தனது விளையாட்டு வாழ்க்கையில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். மறுபுறம், வீட்டையும் குழந்தையையும் பார்த்துக்கொள்ளும் ஹவுஸ் ஹஸ்பென்டாக விஷ்ணு விஷால் இருக்கிறார்.

எல்லாமே சந்தோஷமாக போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு பெரிய பிரச்சனை உருவாகிறது. போட்டிக்கான பயிற்சியில் இருக்கும் ஐஸ்வர்யாவின் உணவில் தெரியாமலேயே போதை மருந்து கலக்கப்படுகிறது. அதன் விளைவாக போட்டியில் தோல்வி, அதன்பின் ஒரு வருட தடை. இந்த சம்பவத்துக்குப் பின்னால் கணவர்தான் காரணம் என்று நினைக்கும் ஐஸ்வர்யா, அவரை விட்டு பிரிவதோடு விவாகரத்தும் கேட்கிறார். இந்த குடும்பம் மீண்டும் இணைகிறதா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

24
கட்டா குஸ்தி 2 விமர்சனம்

படத்தின் மிகப்பெரிய பலம் என்னவென்றால், அது சும்மா சிரிக்க வைக்க மட்டும் முயற்சி செய்யவில்லை. குடும்ப உறவுகள், கணவன்-மனைவி புரிதல், குழந்தையின் மனநிலை என பல விஷயங்களை அழகாக சொல்ல முயற்சித்திருக்கிறது.

விஷ்ணு விஷால், ஹவுஸ் ஹஸ்பென்ட் கதாபாத்திரத்தில் ரொம்பவே இயல்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக மகளுடன் வரும் காட்சிகள் எல்லாம் மனதை தொடுகிறது. சிரிக்கவும் வைக்கிறார், எமோஷனலாகவும் கனெக்ட் பண்ண வைக்கிறார்.

ஐஸ்வர்யா லெட்சுமிக்கும் இந்த படம் நல்ல ஸ்கோப் கொடுத்திருக்கிறது. குஸ்தி வீராங்கனையாக ஆக்ஷன் காட்சிகளிலும், உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் இவரை இன்னும் அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்று தோன்ற வைக்கிறது.

34
கட்டா குஸ்தி 2 ரிவ்யூ

ஆனா, படத்தின் உண்மையான சர்ப்ரைஸ் யார் தெரியுமா? குட்டி மகளாக நடித்திருக்கும் ஸாரா சியானா. ஒவ்வொரு சீனிலும் அசத்தலான எக்ஸ்பிரஷன்ஸ். அப்பா-மகள் கெமிஸ்ட்ரிதான் இந்த படத்தின் உயிர்நாடி.

மோக்‌ஷா நடித்துள்ள ஸ்கூல் டீச்சர் கதாபாத்திரமும் ரசிக்க வைக்கிறது. கருணாஸ், முனிஷ்காந்த், காளி வெங்கட், கருணாகரன் ஆகியோர் தங்களுக்கு கிடைத்த இடங்களில் எல்லாம் காமெடி சரவெடியை போட்டிருக்கிறார்கள். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு ஆகியோரின் சிறப்புத் தோற்றங்களும் கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன.

இசையைப் பொறுத்தவரை 'மகராசி' பாடல் மனதில் நிற்கிறது. பின்னணி இசையும் காட்சிகளுக்கு தேவையான உணர்வை கொடுக்கிறது. சில பாடல்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், படத்தின் ஓட்டத்தை பாதிக்கவில்லை.

44
கட்டா குஸ்தி 2 எப்படி இருக்கு?

முதல் பாதி முழுக்க காமெடி, குடும்ப வாழ்க்கை என்று ஜாலியாக நகர்கிறது. இரண்டாம் பாதி கொஞ்சம் சீரியஸாக மாறினாலும், இடையிடையே வரும் நகைச்சுவை காட்சிகள் படத்தை போரடிக்க விடாமல் காப்பாற்றுகின்றன.

மொத்தத்தில், 'கட்டா குஸ்தி 2' பெரிய திருப்பங்கள் நிறைந்த படம் இல்லையென்றாலும், குடும்பத்துடன் சிரித்து ரசிக்க ஒரு நல்ல பொழுதுபோக்கு படமாக அமைந்திருக்கிறது. அதே நேரத்தில் கணவன்-மனைவி உறவில் நம்பிக்கை, புரிதல், குடும்பத்தின் முக்கியத்துவம் போன்ற விஷயங்களையும் மென்மையாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் செல்லா அய்யாவு. குடும்பத்தோடு தியேட்டரில் ஜாலியாக ஒரு படம் பார்க்கணும்னு நினைக்கிறவர்களுக்கு, 'கட்டா குஸ்தி 2' நல்ல சாய்ஸ்.

Read more Photos on
click me!

Recommended Stories