ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சனோன் நடிப்பில் வெளியாகி இருக்கும் Tere Ishk Mein என்கிற இந்தி திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை இந்த விமர்சனத்தில் விரிவாக பார்க்கலாம்.
ஆனந்த் எல். ராய் தனது OG டச்சோடே இயக்கியிருக்கும் Tere Ishk Mein படம் காதல், துரோகம், மன வலி, மனதை மயக்கும் பாடல்கள் என ஒரு காதல் களஞ்சியத்தில் கிடைக்க வேண்டிய அனைத்தையும் சேர்த்து ஒரு பக்கா பேக்கேஜ் ஆக கொடுத்திருக்கிறார். இது சர்வ சாதாரண ரொமாண்டிக் டிராமா இல்ல; உணர்ச்சிகளின் முழு ஸ்பெக்ட்ரம் ஓட வரும் “மஹா-மஜா” ரைடு.
திரைக்கதை தான் படத்தின் உயிர்நாடி. படம் தொடங்கியதும் மனதில் ஒரு ஸ்பீடு பம்ப் மாதிரி ஒரு வலியை கொடுக்கிறது. ஹிமாஷு சர்மா – நீரஜ் யாதவின் எழுத்து ரொம்பவே பிரமாதம். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை படத்திற்கு மிகப்பெரிய பிளஸ். அதைக் கேட்டால் நம் காதும் மனதும் நெகிழும். இர்ஷாத் கமிலின் வரிகள் அந்த மெலடிக்கு மேலே பனித்துளி போல பதிந்துவிடும். படம் முழுவதும் ராஞ்சனா வைப்-ஐ நினைவூட்டும்.
24
தேரே இஷ்க் மே விமர்சனம்
முதல் பாதி – காதலின் குளிர் தென்றல்… இரண்டாம் பாதி – ரத்தம் கொதிக்க வைக்கும் அட்ரினலின் ரைடு. படத்தின் முதல் பாதில் மனதை வருடும் ரொமான்ஸ் உடன் மெதுவாக நகர்கிறது. ஆனால் இடைவேளைக்குப்பிறகு வேகம் வீசும் புயல் போல கதையில் டென்ஷன், த்ரில், ட்விஸ்ட் உடன் செல்கிறது. கிளைமேக்ஸ் ரொம்பவே போல்டாகவும், யாரும் எதிர்பார்க்காத ஒன்றாகவும் அமைந்திருக்கிறது.
34
தேரே இஷ்க் மே படத்தின் பிளஸ்
தனுஷ் – மாஸ் + மேஜிக் இணைந்து தன்னை ஒரு தரமான நடிகர் என மீண்டும் நிரூபித்து இருக்கிறார். தனுஷின் நடிப்பு செயற்கைத்தனம் இன்றி, யதார்த்தமாகவும் கவனம் ஈர்க்கும் வகையிலும் அமைந்துள்ளது. முதல் பாதியில் சாந்தமாகவும், இரண்டாம் பாதியில் ஃபயராகவும் நடித்திருக்கிறார். கீர்த்தி சனோன் இந்தப் படத்தின் துருப்புச்சீட்டு. முதல் பாதியில் லக்ஷணமாகவும், இரண்டாம் பாதியில் நெருப்பாகவும் தெரிகிறார். ஒரே நேரத்தில் அவரை நேசிக்கவும் வெறுக்கவும் வைக்கும் வகையில் அவரது கதாபாத்திர வடிவமைப்பு இருக்கிறது.
தனுஷ் - கீர்த்தி சனோன் கெமிஸ்ட்ரி வேறலெவலில் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. துணை நடிகர்களின் பங்களிப்பும் அருமை. பிரகாஷ் ராஜ், பிரியான்ஷு பைன்யுலி ஆகியோரின் நடிப்பு. கதைக்கு முதுகெலும்பாக அமைந்துள்ளது. படத்தின் மைனஸ் ஒன்று தான். படத்தின் ரன் டைம் கொஞ்சம் அதிகம். சில இடங்களில் காட்சிகள் இழுவையாக தோன்றும். சில இடங்களில் கட் பண்ணிருந்தா இன்னும் அருமையாக இருக்குமேன்னு தோன்றும். ஆனா அது பெரும் பின்னடைவாக அமையவில்லை.
மொத்தத்தில் ஆனந்த் எல். ராய் தான் "காதல் கதை கிங்" என்கிற பட்டத்தை மீண்டும் உறுதிபடுத்தி இருக்கிறார். காதல் சினிமா ரசிகர்கள் கண்டிப்பாக மிஸ் பண்ணக்கூடாத படமாக இந்த தேரே இஸ்க் மே அமைந்துள்ளது.