தவெகவின் தற்போதைய வெற்றி ஒரு நிலையான வெற்றி அல்ல என்றும், அது வெறும் 'கானல் நீர்' போன்றது என்றும் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். தவெகவுக்கு வாக்களித்தவர்களில் பலருக்கு வேட்பாளர் யார் என்பது கூட தெரியாது என்றும், தெரியாமல் அளித்த அந்த வாக்குகள் செல்லாத வாக்குகளுக்கு சமம் என்றும் அவர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஆட்சி ஒரு மைனாரிட்டி ஆட்சி என்றும், பல்வேறு கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் தற்காலிகமாகவே இயங்கி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் தவெகவுக்கு உரிய பாடம் புகட்டுவார்கள் என்றும் ராஜேந்திர பாலாஜி தனது கருத்தை ஆணித்தரமாகப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க : Money Tree : பணம் காய்க்கும் மரம் உண்மையிலேயே இருக்கு! எங்க இருக்கு தெரியுமா?