தமிழகத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற விசிக செய்யூர், திருப்போரூர், அரக்கோணம், வானூர், காட்டுமன்னார்கோயில், நாகை என 6 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில், காட்டுமன்னார் கோயில், செய்யூர், திருப்போரூர், நாகை ஆகிய 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
ஆனால் இந்தமுறை திமுக அதிக எண்ணிக்கையில் போட்டியிட விரும்புவதால் கூட்டணிக்கட்சிகளுக்கு சீட்டுக்களை குறைத்து கொடுக்க முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. விசிகவினர் 25 சட்டமன்றத் தொகுதிகளைத் திமுகவிடம் கோர விரும்புகின்றனர்.