இதுகுறித்து தமிழக பாஜக தனது எக்ஸ்தளப்பதிவில், ‘‘தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்கள். அதனால், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தேமுதிக-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது’’ எனக் கூறியுள்ளது.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள திமுக தரப்பினர் ‘ ‘ஜெயலலிதா மோடியா? இல்லை லேடியா? எனக் கேட்டார். இப்போது மட்டும் அவரது ஆன்மா உங்களை மன்னித்து விட்டதா?’’ என பதிலடி கொடுத்து வருகின்றனர்.