DMK DMDK Alliance 2026 : 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் தேமுதிக இடையே அதிகாரப்பூர்வமாக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. இதற்காக கூட்டணி அமைக்கும் பணிகளில் கட்சிகள் தீவிரம் கட்டு வருகின்றன. இந்த நிலையில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்க போகிறது என்கிற சஸ்பென்ஸ் நீடித்து வந்தது. பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி குறித்து முடிவெடுத்துவிட்டதாகவும், விரைவில் அது குறித்து அறிவிப்போம் என்றும் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் கூறி வந்தார். இந்த நிலையில் இன்று (பிப்ரவரி 19) காலை அண்ணா அறிவாலயம் வருகை தந்த பிரேமலதா விஜயகாந்த் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
25
200 இடங்களுக்கு மேல் வெற்றி
இந்த சந்திப்பிற்கு பிறகு தேமுதிக மற்றும் திமுக கூட்டணியில் இணைந்து இருப்பதை அவர் உறுதி செய்தார். தங்கள் கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் விரும்பியது போல தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்து இருப்பதாக தெரிவித்தார். கலைஞர் இருந்தபோது 2016 தேர்தலில் பழம் நழுவி பாலில் விழும் என்று கூறினார். ஆனால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இது நடந்திருக்கிறது. இந்த கூட்டணி 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெறும். தொகுதிகளின் எண்ணிக்கை, போட்டியிடும் தொகுதிகள் குறித்து தொகுதி பங்கீட்டுக் குழு அமைத்த பிறகு பேசி முடிவு செய்வோம் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
35
முதல் முறையாக திமுகவுடன் கூட்டணி
2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேமுதிக முதல் முறையாக திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. 20 ஆண்டுகளில் திமுகவுடன் பல கருத்து மோதல்களில் ஈடுபட்டு வந்த தேமுதிக, சில காலமாக திமுகவை விமர்சனம் செய்யாமல் இருந்து வந்தது. மேலும் தங்கள் கட்சியை மதித்து யார் அதிக சட்டமன்ற தொகுதிகளையும், ராஜ்யசபா இடம் ஒதுக்கும் கட்சியுடன் கூட்டணி என்று தொடர்ந்து கூறி வந்தார். இந்த நிலையில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று விரும்பியதால் இந்த கூட்டணி அமைந்து இருப்பதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இந்த நிலையில் தேமுதிகவை வரவேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது! சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்.
55
மகிழ்ச்சி வெள்ளத்தில் தேமுதிக தொண்டர்கள்
கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்! திராவிட மாடல்l ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்!” என்று கூறியுள்ளார். தேமுதிக திமுக கூட்டணி அமைந்திருப்பதால் இரு கட்சியைச் சேர்ந்த தொண்டர்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்து இருக்கின்றனர்.