நடிகர் விஜயின் முன்னாள் மேலாளர் பி.டி.செல்வக்குமார். விஜய் நடித்த புலி படத்தை தயாரித்தவர். பின்னர் கலப்பை என்கிற இயக்கத்தை நடத்தி வந்தார். இந்நிலையில், திமுகவில் இன்று இணைந்த அவர் விஜய் குறித்தும், அவரது அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் விமர்சித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘ விஜய் நடிகராக பணியாற்றும்போது அவர் சிறப்பாக பணியாற்றுவார் என்ற எண்ணத்தில் விஜய் மக்கள் இயக்கதை நானும் அவர் கூட இருந்து கட்டமைத்தவன் தான். இந்த கலப்பை மக்கள் இயக்கத்தை எப்படி கட்டமைத்து, அதை ஒழுங்காக நடத்துகிறானோ, விஜய் மக்கள் இயக்கத்திற்கும் நான் ஒரு மிகப்பெரிய ஒரு பில்லராக இருந்து பணியாற்றியவன். ஆனால், காலப்போக்கில் உங்களுக்கு தெரியும், நிறைய ஒரு புதிது புதிதாக உள்ளே வருகிறார்கள். அந்த புதிது புதிதாக வருபவர்கள் முன்னிலையில் எங்களை மாதிரி ஆட்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. விஜயின் அப்பாவாலேயே அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அங்கு பயணம் பண்ண முடியாத ஒரு சூழல் ஏற்படுகிறது.