
‘‘திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள்தான், கண்டிப்பாக வீழ்ந்து போவார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக 2026-ல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்பார்’’ என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு மக்களிடம் பாஜகவின் பேச்சும், எண்ணங்களும் ஒருபோதும் பலிக்காது. பாஜகவின் பிளான் பி இது. விஜய் ஏ4 ஷீட் பார்த்து படிப்பதை நிறுத்த வேண்டும்.திமுகவை போட்டியாக நினைத்தால்தான் வளர முடியும் என்று குறிக்கோளாக வச்சிருக்காங்க. தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. பாஜக எத்தனை முயற்சி எடுத்தாலும் அவர்கள் நினைப்பது ஒரு போதும் நிறைவேறாது. இது பெரியார், அண்ணா, கலைஞர் மண்.
எதுவாகினும் இங்கு மக்கள் தான் முடிவு செய்வார்கள். 2026 ஜனவரி மாதம் பெரியார் நூலகம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தின் வளர்ச்சியில் முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி வருகிறார். போலி வாக்காளர்கள் என்று சொல்வதே தவறு. எந்த அடிப்படையில் ஒருவரை போலி வாக்காளர் என்று சொல்கிறார்கள். தகுதியானவர்கள் விடுபடக் கூடாது, தகுதி இல்லாதவர்கள் சேர்ந்து விடக் கூடாது என்பதுதான் எங்களின் நோக்கம்.
வரலாற்றில் ஒவ்வொரு முறையும் மற்ற அரசியல் கட்சிகள் திமுகவை தான் போட்டியாக நினைக்கிறார்கள். திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் தான் வீழ்வார்கள். கோவையில் திமுக கூட்டணி வெற்றி பெறும். 210 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என எல்லோரும் சொல்வார்கள். அவர்கள் சொல்வதற்கான உரிமைகள் இருக்கிறது. ஆகையால் அவர்களுடைய ஆசை அது. அந்த கருத்தை தெரிவித்து இருக்கிறார்கள்.
ஒவ்வொருத்தர் அரசியல் கட்சி. அவங்களுடைய கருத்துக்கள் சொல்றது உரிமை இருக்கு. அதனால் அவருடைய கருத்தை அவர் சொல்லி இருக்கிறார். அது அவருடைய ஆசையாக இருக்கலாம். அது 2026 தேர்தல் வாக்கு எண்ணிக்கை அன்று தான் அவர் எவ்வளவு தொகுதியில்என்ன ரிசல்ட் என்பது தெரிய வரும். கல நிலவரங்களை பொறுத்தவரை நீங்கள் பாக்கிறீர்கள். நாங்களும் பார்க்கிறோம். நீங்களும் எல்லா பகுதிகளிலிம் சுற்றி பார்க்கிறீர்கள். சில நேரங்களில் இருக்கக்கூடிய நிறைகளை அதிகமாக சொல்வதை விட, குறைகளை அதிகமாக சொல்கிறார்கள்.
அதை நாங்க எங்களுக்கு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்கிறோம். செய்யக்கூடிய பணிகளுக்கு நீங்கள் எங்களுடைய கவனத்தில் கொண்டு வருவதாக நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். கோயம்புத்தூரில் பொருத்தவரைக்கும் குறைகள் சொன்னாலும் கூட அந்த குறைகளை நிவர்த்தி செய்வதற்காக தான் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். அரசு அப்படி தான் நடவடிக்கை எடுக்கிறது. மாவட்ட ஆட்சியர் உட்பட அரசு அதிகாரிகளும் உடனடியாக நீங்கள் சொல்லக்கூடிய அந்த குறைகளை சரி செய்வதற்கான பணிகளை முன்னெடுத்து வருகின்ன்றனர். அரசியல் கட்சிகளை பொருத்தவரைக்கும் ஒவ்வொருத்தருக்கும் அந்த வாய்ப்புகள் இருக்கு.
அவர்களுடைய கருத்து மிகத் தெளிவாக உள்ளது. அதாவது பலமுறை என்னுடைய கழகத் தலைவர் ஸ்டாலின் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். ஒன்றியத்தில் இருக்கக்கூடிய பாஜக அரசு பொருத்தவரை தமிழ்நாட்டு மக்களிடத்தில் அவர்கள் சொல்கின்ற, அவர்கள் எண்ணுகின்ற எண்ணங்கள் நிறைவேறாது என்பதை தெரிந்து கொண்டு இப்பொழுது ஒரு மாற்று திட்டமாக அவர்கள் முன்னெடுத்திருப்பது அமலாக்கத்துறை வருமான வரித்துறை. இப்போது தேர்தல் ஆணையம். இதையெல்லாம் அவர்களுடைய கையில் வைத்துக்கொண்டு அதற்கான முயற்சிகளை முன்னெடுக்கின்றார்கள். அவர்கள் எத்தனை முயற்சிகள் எடுத்தாலும் கூட இது பெரியார் மண். கலைஞர் ஆண்ட மண். முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது.
இந்த தமிழ்நாட்டில் எந்தவிதமான பாஜகவின் எண்ணங்கள் ஒருபோதும் ஈடேறாது. மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். அதான் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் நடந்தது. நாடாளுமன்ற தேர்தல் நடந்தபோது சில ஆங்கில தொலைக்காட்சிகள் கோவையில் லைவ் ஒளிபரப்பு செய்தனர். தேர்தல் ரிசல்ட்டை அவர்களே அறிவித்ததை போல அடுத்த கட்டத்துக்கு சென்றதுபோல லைவ்ல இருந்தது. நீங்களும் நானும் தீர்மானிக்க முடியாது. லைவ் போடுற சேனல் தீர்மானிக்க முடியாது. சில பத்திரிகைகள் தீர்மானிக்க முடியாது. கருத்துக்கணிப்பு எல்லாம் வெளியிட்டு தீர்மானிக்க முடியாது. மக்கள்தான் தீர்மானிக்கணும். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலாக இருக்கட்டும், கோவையில் அதற்கு பிறகு நடந்த நாடாளுமன்ற தேர்தல் என அனைத்திலும் முதல்வருக்கு மகத்தான வெற்றிகளையே கொடுத்திருக்கிறார்கள். அந்த வெற்றி தான் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும்’’ எனத் தெரிவித்தார்.