திமுக அரசு இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்தது. ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை அரசு செயல்படுத்தவில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், 9 ம்தேதி திமுக தலைமையில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி போன்ற 107-120 எம்.பி-கள் மக்களவை ஸ்பீக்கர் ஒம் பிர்லாவிடம் இம்பீச்மெண்ட் நோட்டீஸ் சமர்ப்பித்தனர். இது அரசியல் அமைப்புச் சட்டம் 217 மற்றும் 124 பிரிவுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்டது.
கனிமொழி, டி.ஆர். பாலு, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், சுப்ரியா சுலே, ஆ.ராஜா, கலாநிதி மாறன், தொல்.திருமாவளவன், அசாதுதீன் ஓவைசி உள்ளிட்டோர் கையொப்பமிட்டனர். நீதிபதியின் நடத்தை நீதித்துறையின் தன்னாட்சி, வெளிப்படைத்தன்மை, சமத்துவவாத அமைப்பை சந்தேகத்திற்குரியதாக்கியுள்ளது. மக்களவையில் 100 எம்.பி-கள் அல்லது ராஜ்யசபாவில் 50 எம்.பி-கள் கையொப்பம் போட்டால் இம்பீச்மெண்ட் செய்ய உரிமை உள்ளது. இது இரு அவைகளிலும் நிறைவேற வேண்டும். 3 பேர் கொண்ட கமிட்டி விசாரிக்கும். குடியரசுத் தலைவர் இம்பீச்மெண்டுக்கு (இழப்பு) உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இந்தியாவில் இதுவரை ஒரு நீதிபதியும் இம்பீச் செய்யப்படவில்லை.