தவெகவை பலப்படுத்தும் பொறுப்பு என்னுடையது. அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் முக்கிய தலைவர்களை தவெகவில் இணைக்க முயற்சி செய்வேன். டிசம்பர் 18ஆம் தேதி காலை 11 மணி முதல் 1 மணி வரை தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்வார். அன்றைய தினம், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், குறிப்பாக விஜயமங்கலம் டோல்கேட் அருகே சரளை பகுதியில், தலைவர் விஜயின் பிரச்சார நிகழ்வு நடைபெற உள்ளது. தலைவர் விஜயை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணியில் சேர்ப்போம். கூட்டணியில் யாரை சேர்க்க வேண்டும் என்பதை விஜய் முடிவு செய்வார்.
தவெக, அதிமுகவாக மாறும் என்று நான் சொல்லவில்லை. தவெகவில் பல பேர் இணைய வாய்ப்பு உள்ளது. என்னை வரவேற்கிற வாழ்த்தும் என்னை அரவணைத்து செல்லும் இயக்கத்தில் சேர்வதால் தவறில்லை. தவெகவில் மட்டற்ற மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். எம்ஜி.ஆர்- ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் எப்படி இருந்தேனோ, அப்படி தான் தவெகவில் இருக்கிறேன். மக்கள் மத்தியில் தவெகவுக்கு வரவேற்பு இருக்கிறது.