அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் பாஜகவை கூலாக்குவது போல் சில தீர்மானங்கள் இருந்தது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் எஸ்.ஐ.ஆர் பணிகளை ஆதரித்து இருந்தது. இண்டாவது நீதித்துறையை மதிக்காத திமுக என திருப்பரங்குன்றம் விவகாரத்தை ஒட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. இப்படி சில விஷயங்கள் பாஜகவுக்கு ஆதரவாக இருந்தாலும் இன்னொரு பக்கம் சில அதிர்ச்சி மெசேஜ்களையும் கொடுத்திருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதில் முதன்மையான ஷாக் முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ். நேற்று கூட ஒருங்கிணைந்த அதிமுக தான் நல்லது, ஒருங்கிணைப்பார்கள் என்று தெரிவித்து இருந்தார்.
ஆனால் வாய்ப்பில்லை என எல்லாவற்றுக்கும் கேட்டை இழுத்து மூடிவிட்டார்கள். அவர் மட்டுமல்ல. சசிகலா உள்ளிட்ட யாரையும் இணைப்பது குறித்து எந்தவிதமான பாசிட்டிவான சிக்னல்களும் கொடுக்கப்படவில்லை. இது அப்செட். இன்னொரு பக்கம் உள்துறை அமைச்சர் அமித் ஷா டிசம்பர் 10ஆம் தேதி பிறகு பார்த்துக்கலாம் என ஏற்கனவே ஓபிஎஸிடம் கூறியிருந்ததாக சொல்லப்படுகிறது. அவர்களும் இதை எதிர்பார்த்ததுதான் இருந்தாலும், சரி, இந்த விவகாரத்தில் வேறொரு முயற்சி எடுக்கலாம் என அமித் ஷா யோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதைவிட பெரிய ஷாக் என்னவென்றால் அதிமுக இயற்றிய தீர்மானங்களில் முக்கியமானது. தமிழ்நாட்டில் கூட்டணி தலைமை அதிமுக தான். முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி தான். அவர்தான் இந்த தேர்தலை முன்னெடுப்பார் எனவும் தீர்மானம் இயற்றியிருந்தார்கள். இன்னொருவரான விஜய்க்கும் மெசேஜ் கொடுத்திருக்கிறார்கள்.