திமுக மீது தவெகவின் திடீர் கரிசனம்.. டெல்லியில் நடந்த மனமாற்றம்..! அடியோடு மாறிய நிர்வாகிகள்..!

Published : Jan 01, 2026, 03:40 PM IST

திட்டமிட்டு அந்த நெரிசல் உருவாக்கப்பட்டு, ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தினார்களா? என்கிற தொனியில் சிபிஐயிடம் பல கேள்விகள் இருந்தது. ஆனால் எங்கேயுமே திமுக நிர்வாகிகளை விட்டுக் கொடுத்து தவெக நிர்வாகிகள் பேசவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

PREV
14

கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் டெல்லியில் நடந்த விசாரணையில் திமுகவுக்கு எதிராக தவெக நிர்வாகிகள் வாயே திறக்கவில்லை என்று கூறுகிறார்கள்.

கரூர் விவகாரத்தில் திமுக மீது தவெக தரப்பில் விஜய், ஆதவ் அர்ஜூனா போன்றோர் இதை திட்டமிட்ட சதி என்று குற்றம்சாட்டினர். கூட்டத்திற்கு அனுமதி கொடுக்க இழுத்தடித்து, கடைசியில் ஆபத்தான இடத்தை ஒதுக்கியது திமுக அரசு என்றும் தவெகவினர் கூறினர். விஜய் செந்தில் பாலாஜியை விமர்சித்ததால், செருப்பு வீசப்பட்டது. அதனால் கூட்டம் கலைந்து நெரிசல் ஏற்பட்டது என்றும், மின்சாரம் துண்டிக்கப்பட்டது, போலீஸ் போதிய பாதுகாப்பு கொடுக்கவில்லை. அரசு திட்டமிட்டு குழப்பம் ஏற்படுத்தியது என்று குற்றம்சாட்டினர். உச்சநீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரி வழக்கு தொடர்ந்து தவெகவினர் வெற்றி பெற்றனர்.

24

முதலமைச்சர் ஸ்டாலின், செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் கரூர் கூட்ட நெரிசலுக்குக் காரணம் தவெகவின் ட்திட்டமிடலே காரணம் என்றும், விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்ததால் கூட்டம் கலைந்து நெரிசல் ஏற்பட்டது. எதிர்பார்த்ததைவிட அதிக கூட்டம் கூடியது. போதிய ஏற்பாடுகள் செய்யவில்லை. காவல்துறையினர் எச்சரித்தும் தவெக நிர்வாகிகள் கேட்கவில்லை. எனவே உயிரிழப்புகளுக்கு தவெகவே பொறுப்பு என்று குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் தற்போது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி டெல்லியில் நடந்த விசாரணையில் தவெக நிர்வாகிகளான ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த், சிடிஆர்.நிர்மல்குமார் ஆஜராகினர். அப்போது திமுகவ சிக்க வைக்கிற கேள்விகளுக்கு ஆதவ் அர்ஜூனோ, புஸ்ஸி ஆனந்தோ பிடி கொடுக்காமல் பதில் சொன்னாதாக கூறப்படுகிறது. முதல் நாள் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மறுநாள், மூன்றாம் நாள் விசாரணை சீரியஸாக தொடர்ந்துகிட்டே போனது. புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூன் போன்றோரிடம் தனித்தனியாக ஏகப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

34

அப்போது குறிப்பாக திமுகவையும் தமிழக அரசையும் சிக்க வைக்கிற மாதிரியான பல கேள்விகள் இருந்ததாக கூறப்படுகிறது. விசாரணைக்கு ஆஜரான ஆதவ் அர்ஜூன் உட்பட அனைவரும் தமிழக அரசுக்கு எதிராகவோ, கரூர் மாவட்ட நிர்வாகத்துக்கு எதிராகவோ வாயே திறக்கவில்லை என்கிறார்கள். ‘‘நாங்கள் பத்தாயிரம் பேர் வரை எதிர்பார்த்தோம். ஆனால், ரசிகர்கள் எதிர்பாக்காத அளவுக்கு வந்துவிட்டார்கள். திடீரென ஏற்பட்ட அசாதாரணமான சூழ்நிலையை யாருமே எதிர்பார்க்கவில்லை. எங்களால சமாளிக்க முடியவில்லை. மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதில் முழு கவனமும் செலுத்தினார்கள்’’ எனக் கூறியிருக்கிறார்கள்.

44

திட்டமிட்டு அந்த நெரிசல் உருவாக்கப்பட்டு, ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தினார்களா? என்கிற தொனியில் சிபிஐயிடம் பல கேள்விகள் இருந்ததாக சொல்லப்பகிறது. ஆனால் எங்கேயுமே திமுக நிர்வாகிகளை விட்டுக் கொடுத்து தவெக நிர்வாகிகள் பேசவில்லை என்று கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories