
கடந்த சில நாட்களுக்கு முன் பசும்பொன்னில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்,
அம்மா தொண்டர்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஓபிஎஸ், அதிமுகவில் சமீபத்தில் நீக்கப்பட்ட கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த பத்திரிகையாளர் சந்திப்பு குறித்து சாட்டை துரைமுருகன் ஒரு காணொளி வெளியிட்டிருந்தார். அந்த காணொளியில் டிடிவி தினகரன் குறித்து சட்டை துரை முருகன் விமர்சித்து இருந்தனர்.
அதைப் பார்த்த அமமுக தொண்டர்கள் டிடிவி. தினகரனின் ராஜ விசுவாசிகள், டிடிவி தினகரன் பற்றி தெரிந்து கொண்டு பேசுங்கள். தெரியாமல் பேசாதீர்கள் சாட்டை எனக்கூரி வாட்ஸ் அப் வாயிலாகவும், அலைபேசி வாயிலாகவும், குறுஞ்செய்தி வாயிலாக செய்திகளை அனுப்பி இருந்ததாகக் கூறப்படுகிறது. அடுத்து சாட்டை துரைமுருகன், டிடிவி தினகரன் பற்றி தெரிந்து கொண்டு பேசுங்கள் என்று கோரிக்கையை ஏற்று முழுமையாக தெரிந்து கொண்டு சில விஷயங்களை மட்டும் இந்த காணொளியில் தெளிவாக பார்க்கலாம் எனக் கூறி ஒரு ஆடியோவை வெளியிட்டார்.
அந்த வீடியோவில், ‘‘கடந்த சில நாட்களுக்கு முன் பசும்பொன்னில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன், முழுமையாக தெரிந்து கொண்டு சில விஷயங்களை மட்டும் இந்த காணொளி தெளிவா பாக்கலாம்னு இருக்கோம். அதிமுகவில் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும் போது பெரியகுளம் தொகுதியில பாராளுமன்ற உறுப்பினராக போட்டி போட்டவர் டிடிவி. தினகரன். அதிமுகவை உருவாக்கிய ஐம்பெரும் தலைவர்களில் டிடிவி தினகரன் ஒருத்தராக இருந்திருக்கிறாரா என்றால் இல்லை. அதிமுகவை எம்ஜிஆர் அவர்கள் கிராமமாக கொண்டு போய் சேர்க்கும் பொழுது பிரச்சார பீரங்கியாக இருந்து கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து அதிமுகவ மக்களிடம் கொண்டு போய் சேர்த்தா? அப்படி பார்த்தா இல்லை.
அதிமுகவுக்காக பத்து கட்டுரைகளை எழுதி அதிமுக கொள்கைகளை, கோட்பாடுகளை, சித்தாந்தங்களை, தத்துவங்களை எழுதியவனாரா என்றால் இல்லை. யார் இந்த டிடிவி தினகரன்? ஜெயலலிதா அவர்களுடைய தோழியாக இருந்த சசிகலா அவருடைய அக்கா மகன் தான் டிடிவி தினகரன். இவர்களுக்கு குழந்தை இல்லை என்பதால் அவர்களுக்கு இந்த அக்கா பிள்ளை, தங்கச்சி பிள்ளை, அண்ணன் பிள்ளை போல அதிக பாசம் ஜெயலலிதாவுக்கு. அந்த அடிப்படையில போயஸ் தோட்டத்துக்குள் சசிகலாவின் அக்காள் மகனாக சென்றவர் இவர். இப்ப ஸ்டேஷனில் நாம இன்ஸ்பெக்டர் மாமா இருக்கிறார் என்றால் போயிட்டு வருவோம்ல. அது மாதிரி சசிகலா, ஜெயலலிதாவுடைய தோழியாக இருப்பதனால் இவங்க எல்லாம் அங்க போறாங்க.
அங்க போய் வரும்போது இந்த சமூகத்தில் ஒரு வேட்பாளர் நியமிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் பெரியகுளத்தில் பெரியகுளம் பாராளுமன்ற தொகுதிக்கு நிறுத்தப்படுகிறார். அப்படியானால் இந்திய வரலாறு, உலக வரலாறு, தேனி வரலாறு எல்லாம் கரைச்சு தள்ளி விடுவார் என்கிற அர்த்தமல்ல. சசிகலாவுடைய அக்கா மகன் என்கிற ஒரே காரணத்துக்காக சீட்டு கொடுக்கப்படுகிறது. மைனர் குஞ்சுவாக இருந்த அவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள். அந்த தொகுதியின் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் இருந்திருந்ததாலா போட்டிக்கு அனுப்பி வைக்கிறாங்க? 1999 2004 வரைக்கும் அந்த தொகுதியில் போட்டி போட்டு எம்.பியாக இருந்தார். அந்த தொகுதில சிறந்து பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருந்தால் பாராளுமன்றத்தில் போய் அந்த தொகுதியில் பிரச்சனை குறித்து பேசி இருந்தாரா?
பார்லிமென்ட் டைகர் டிடிவி.தினகரன் பெயர் வாங்கி இருந்தால் திருப்பி அந்த தொகுதியில் நிப்பாட்டிருப்பாங்க. அதோட சரி திருப்பி 2007ல் அதிமுக பொருளாளராக அதிமுகவில் நியமிக்கப்படுகிறார். அதிமுகவில் இதற்கு முன்னாடி திண்டுக்கல் சீனிவாசன் இருந்தார். ஒரு கட்சியினர் பொருளாளராக 20 வருஷம் 30 வருஷம் அவங்க சாகுற வரைக்கும் அவங்க தான் இருப்பாங்க. ஆனால், டிடிவி.தினகரன் அப்படியும் செயல்படவில்லை’’ எனக்கூறி இருந்தார் சாட்டை துரைமுருகன்.
இந்நிலையில், சாட்டை துரைமுருகன் தனது எக்ஸ்தளப்பதிவில், தற்போது, ‘ ‘அரசியல் விமர்சனத்தை ஏற்க முடியாத அமமுக கட்சியைச் சார்ந்த டிடிவி. தினகரன், தனது அடியாட்கள் மற்றும் குண்டர்களை அனுப்பி திருச்சியில் உள்ள எனது வீட்டில் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்’’ என பகீர் குற்றச்சாட்டை கிளப்பி உள்ளார். அதேபோல் நாதவை சேர்ந்த இடும்பாவனம் கார்த்தி இதுகுறித்து தனது எக்ஸ்தளப்பதிவில், ‘‘ சாட்டை துரைமுருகனின் அரசியல் விமர்சனங்களை எதிர்கொள்ள வக்கற்ற டி.டி.வி. தினகரன் குண்டர்களை அவரது வீட்டுக்கு அனுப்பி பொறுக்கித்தனம் செய்ய முற்படுவது கோழைத்தனமானது’’ என தனது கண்டத்தை தெரிவித்துள்ளார்.