தவெக வாக்கு மாறியது - த்ரிஷா அம்மாவால் வாக்கு சாவடியில் சலசலப்பு! தேர்தல் கலாட்டாஸ் ஒரு பார்வை!

Published : Apr 23, 2026, 05:32 PM IST

Election Drama and Voting Chaos Explained: இன்று தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் நடந்து வரும் நிலையில், சில இடங்களில் நடந்த கலாட்டாக்களின் தொகுப்பு இதோ

PREV
15
தேர்தல் புறக்கணிப்பு - தீக்குளிக்க முயற்சி:

விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதி கோட்டக்குப்பம் 10, 11-வது வார்டு மக்கள் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததை கண்டித்து போராட்டத்தில் eஈடுபட்டு, தேர்தலை புறக்கணித்தனர். தொடர்ந்து பரபரப்பு நிலவியதால், அசம்பாவிதங்களை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போராட்டத்தை அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளாததால், வழக்கறிஞர் கார்த்திகேயன் என்பவர் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றது அதிர்ச்சியின் உச்சம்.

25
தவெக ஓட்டு மாறியது:

சமயபுரம் 15 வார்டில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வந்த மூதாட்டி, தனது வாக்கை 5-வது பட்டனில் இருக்கும் விசிலுக்கு போட சொல்லி இருக்கிறார். ஆனால், அவருக்கு உதவிய தேர்தல் அதிகாரி, நம்பர் 1 பட்டனை அழுத்தி உதயசூரியனுக்கு மாற்றிப் போட்டுள்ளார். இது தொடர்பாக கேள்வி எழுப்பி தவெகவினர் வாக்குவாதத்தில் eஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

35
தேத்தல் குறித்து டி.ஆர் ஆவேசம்:

தியாகராய நகரில் வாக்கு செலுத்த வந்த டி.ராஜேந்தர், முறையாக தேர்தல் ஏற்பாடுகள் செய்யவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குச்சாவடியில் மக்களுடன் மக்களாக வரிசையில் நின்றிருந்தார். அப்போது முதியவர்கள் ஓரமாக அமர்ந்திருந்தனர். இதை பார்த்து கோபமடைந்த டி.ஆர், சீனியர் சிட்டிசன்களுக்கு தனி வரிசை ஏன் அமைக்கவில்லை என்று ஆவேசமாக கேள்வி eழுப்பியது சலசலப்பை ஏற்படுத்தியது.

45
த்ரிஷாவின் தாயால் புதிய சர்ச்சை:

நடிகை த்ரிஷாவின் தாயார் தேர்தல் விதிகளை மீறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. ECI விதிப்படி வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதியில்லை. ஆனால் த்ரிஷாவின் அம்மா ஆழ்வார்பேட்டையில் த்ரிஷாவுடன் சென்று வாக்களித்த அவர் கையில் செல்போன் வைத்திருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது, த்ரிஷாவின் தாயாரை மட்டும் செல்போன் கொண்டு செல்ல அனுமதித்து ஏன் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

55
வாக்குச்சாவடியிலேயே பணப்பட்டுவாடா?

அடுத்த 5 ஆண்டுகளை தமிழகத்தை யார் ஆள வேண்டும் என்பதற்கான, மக்களின் ஓட்டை பணம் கொடுத்து வாங்குவது போல கொடைக்கானலில் வாக்குசாவடி மையத்தின் நுழைவு வாயிலில் நின்று, திமுகவினர் ஓட்டுக்கு பண விநியோகம் செய்வதாக அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories