கமல், உதயநிதி, வானதி சீனிவாசன்... ஒரே நாளில் வரிசை கட்டி வேட்புமனு தாக்கல் செய்த நட்சத்திர வேட்பாளர்கள்...!

First Published | Mar 15, 2021, 9:41 PM IST

சுப முகூர்த்த தினம் என்பதால் இன்று ஒரே நாளில் அதிமுக, திமுக, மநீம, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

திமுக சார்பில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது முதல் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
திருமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேட்புமனு தாக்கல் செய்தார்.
Tap to resize

தொண்டாமுத்தூர் தொகுதியில் களமிறங்க உள்ள அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அமைச்சர் கே.சி. வீரமணி 3வது முறையாக ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட அமைச்சர் கடம்பூர் ராஜு வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கோபிச்செட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மதியம் 12.15 மணிக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
ராஜபாளையத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வேட்புமனு தாக்கல் செய்தார்.
குமாரபாளையம் தொகுதிக்கு அமைச்சர் தங்கமணி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார்
கோவை தெற்கு தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளராக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். அவர் இன்று கோவை ஓசூர் சாலையில் உள்ள மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில், தெற்கு தொகுதி தேர்தல் அலுவலர் சிவசுப்பிரமணியனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்புமனு தாக்கல் செய்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையிலான கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான கமல் இன்று கோவை தெற்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கோவில்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா வேட்புமனு தாக்கல் செய்தார்.
பண்ருட்டி தொகுதியில் போட்டியிடும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று பகல் 12:15 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Latest Videos

click me!