அதிமுக ஆட்சியை காப்பாற்றிய முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு, அவரது அவிநாசி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிக்காக பாஜகவிற்கு தொகுதி தாரை வார்க்கப்பட்டதால், விசுவாசத்திற்கு அதிமுகவில் இடமில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுகவில் விசுவாசிகளுக்கு எப்போதும் மதிப்பு இருக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில் அதனை பொய்காகும் வகையில் தற்போது புதிய புகைச்சல் எழுந்துள்ளது. தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், அ.தி.மு.க கூட்டணியில் ஏற்பட்டுள்ள சலசலப்புகள் அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. குறிப்பாக, அவிநாசி (தனி) தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ-வும், முன்னாள் சபாநாயகருமான தனபாலுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது, "விசுவாசத்திற்கு அ.தி.மு.க-வில் இடமில்லையா?" என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
25
ஆட்சியைக் காத்த விசுவாசம்: மறந்ததா தலைமை?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, 18 எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி தூக்கி அ.தி.மு.க ஆட்சி கவிழும் நிலையில் இருந்தபோது, சபாநாயகர் பதவியிலிருந்த தனபால் எடுத்த துணிச்சலான முடிவுகள்தான் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான ஆட்சியைக் காப்பாற்றின. அன்று ஆட்சியைத் தக்கவைக்கத் தூணாக நின்ற அதே தனபால், இன்று சொந்தத் தொகுதியிலேயே சீட் கிடைக்காமல் தவிக்கவிடப்பட்டிருப்பது அரசியலில் பெரும் துரோகமாகக் கருதப்படுகிறது.
35
அவிநாசியில் நடந்தது என்ன?
அவிநாசி தொகுதி அ.தி.மு.க-வின் அசைக்க முடியாத கோட்டை. ஏழு முறை சட்டமன்ற உறுப்பினராக வென்ற தனபால், அந்தத் தொகுதியில் செல்வாக்குமிக்கத் தலைவராகத் திகழ்கிறார். ஆனால், இந்த முறை கூட்டணி கணக்குகளைக் காரணம் காட்டி, அவிநாசி தொகுதி பா.ஜ.க-வுக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளது. "விருப்ப மனு கொடுத்திருந்த என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல், தொகுதியை கூட்டணிக் கட்சிக்குக் கொடுத்துவிட்டார்கள்" என்று தனபால் வெளிப்படுத்திய குமுறல், அவரது ஆதரவாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனபாலுக்கு சீட் மறுக்கப்பட்டதன் பின்னணியில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது, கட்சித் தலைமை நேரில் சென்று நலம் விசாரிக்கக்கூட இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன் அதிருப்தி காரணமாக ஏற்கனவே அ.தி.மு.க-விலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணைந்துவிட்டது கட்சித் தலைமைக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை அவிநாசியில் களம் இறக்க பா.ஜ.க மேலிடம் அழுத்தம் கொடுத்ததால், எடப்பாடி பழனிசாமி பணிந்துவிட்டதாகத் தெரிகிறது.
55
அதிமுகவின் வெற்றியைப் பாதிக்கும்
பழைய முகங்கள் கட்சிக்குள் இருந்தால் தனது தனி ஆதிக்கம் பாதிக்கப்படும்" என எடப்பாடி பழனிசாமி கருதுவதாகத் தனபாலின் ஆதரவாளர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்து மூத்த தலைவர்களை ஒவ்வொன்றாகக் கழற்றிவிடுவது, வரும் தேர்தலில் அ.தி.மு.க-வின் வெற்றியைப் பாதிக்கும் என அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர். ஆட்சியைக் காப்பாற்றிக் கொடுத்த விசுவாசிக்கு, தேர்தலில் நிற்க இடமில்லாமல் 'அல்வா' கொடுத்திருப்பது அ.தி.மு.க-வின் உட்கட்சி ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் செயலாகவே பார்க்கப்படுகிறது.