ஓ.பி.எஸும், டிடிவி.தினகரனும் தவெக கூட்டணிக்கு செல்லவுள்ளதாக உறுதியாகக் கூறப்படும் நிலையில், அவர்களை டேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டுவருவதே அமித் ஷாவின் அசைன்மெண்ட் என்று அடித்துக் கூறுகிறார்கள்.
வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்பே ஓ.பி.எஸும், டிடிவி.தினகரனும் தவெக கூட்டணிக்கு வந்துவிடுவார்கள் என செங்கோட்டையன் நம்பிக்கையாகச் சொல்லிக் கொண்டு இருக்கிறார். ஆனாலும், ஓ.பி.எஸும், டிடிவி.தினகரனும் தவெக பக்கம் செல்வதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விரும்பவில்லை என்கிறார்கள். பாஜக தரப்பில் இருந்து இருவரிடமும் தொடர்ந்து பேசிக் கொண்டு இருந்தாலும் கூட, அவர்கள் இன்னும் உறுதியான பதிலை கொடுக்கவில்லை. இந்த நிலையில் மாவட்ட வாரியாக, தொகுதி வாரியாக நிர்வாகிகள் கூட்டத்தை நடத்திக் கொண்டு வருகிறார் டிடிவி.தினகரன். பல தொகுதிகளில் தனது கட்சியின் வேட்பாளர்களையும் அறிவிக்கத் தொடங்கி இருக்கிறார்.