காங்கிரஸ் கேட்கும் 39..! வெளியான தொகுதி லிஸ்ட்..! திமுகவை கதறவிடும் கதர்சட்டைகள்..!

Published : Feb 02, 2026, 12:33 PM IST

திமுக கூட்டணியில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள விசிக, மதிமுக, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்டவர்களுக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், காங்கிரசின் இந்த கூடுதல் கோரிக்கை கூட்டணிக்குள் புதிய சிக்கலை உருவாக்கும்

PREV
14
தவெக தெம்பில் திமுகவை கதறவிடும் காங்கிரஸ்

நடிகர் விஜய் தவெகவை ஆரம்பித்து, தமிழ்நாட்டில் திமுகவுக்கும் தங்களுக்கும்தான் போட்டியே. களத்தில் அதிமுக இல்லவே இல்லை’ என தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.

தவெக சார்பில் விஜய் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டங்களில் இளைஞர்களும், இளம்பெண்களும் லட்சக் கணக்கில் குவிந்து வருவது, ‘டெல்லி’ வரை தமிழகத்தை திரும்பிப்பார்க்க வைத்தது. தவிர, வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைக்க விஜய் விரும்புகிறார். இதற்கான பேச்சு வார்த்தையிடும் ஈடுபட்டு வருகிறார். விஜய்யின் தந்தை ‘காங்கிரசுக்கு நேரடியாகவே அழைப்பும்’ விடுத்திருக்கிறார். ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் தி.மு.க.விற்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

24
காங்கிரஸின் விடாப்பிடி

இந்த நிலையில்தான் திமுக தலைமையிடம் நேரடியாக பேச காங்கிரஸ் மேலிடம் திடீரென ஐவர் குழுவை அமைத்தது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த குழுவில் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் நேற்று சென்னை அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.

திமுக தரப்பில் மூத்த அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையின் போது, ‘‘இம்முறை குறைந்தது 39 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட வேண்டும்’’ என்று அந்த குழு வலியுறுத்தியதாக தெரிகிறது. மேலும், காங்கிரசுக்கு சாதகமானதாக கருதப்படும் 125 தொகுதிகளை ஆய்வு செய்து, அதில் இருந்து 39 தொகுதிகளின் பட்டியலையும் திமுக தலைமையிடம் வழங்கியுள்ளதாக தகவல்கள் கசிகிறது.

34
திமுக கூட்டணியில் புதுச் சிக்கல்

ஆனால், இந்த கோரிக்கைக்கு உடனடி முடிவு எடுக்காமல், திமுக சார்பிலும் ஒரு குழு அமைத்த பின்னர் விரிவாக ஆலோசிக்கலாம் என்ற பதிலையே முதல்வர் அளித்திருக்கிறார். அதே நேரத்தில், திமுக கூட்டணியில் ஏற்கனவே இடம்பெற்றுள்ள விசிக, மதிமுக, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்டவர்களுக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், காங்கிரசின் இந்த கூடுதல் கோரிக்கை கூட்டணிக்குள் புதிய சிக்கலை உருவாக்கும் என்கிறார்கள் அரசியர் விமர்சகர்கள்.

44
காங்கிரஸ் கேட்கும் அந்த 39 தொகுதிகள்

இந்நிலையில் காங்கிரஸ் கேட்டுள்ள தொகுதிகளின் பட்டியல் தற்போது கசிந்துள்ளது. அதன்படி, பொன்னேரி, வேளச்சேரி, ஸ்ரீபெரும்புதூர், செய்யூர், மதுராந்தகம், சோளிங்கர், கே.வி.குப்பம், கலசப்பாக்கம், ஊத்தங்கரை, கள்ளக்குறிச்சி, ஆத்தூர், ஓமலூர், சேலம் தெற்கு, சங்ககிரி, நாமக்கல், கோபிசெட்டிப்பாளையம், ஊட்டி, சூலூர், கோவை தெற்கு, உடுமலைபேட்டை, விருத்தாசலம், கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, பாபநாசம், அறந்தாங்கி, காரைக்குடி, மேலூர், மதுரை தெற்கு, ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருவாடானை, ஸ்ரீவைகுண்டம், தென்காசி, கடையநல்லூர், நாங்குநேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய தொகுதிகளை காங்கிரஸ் கேட்கிறதாம்.

Read more Photos on
click me!

Recommended Stories