சட்டமன்ற இடைத்தேர்தல்களில், தவெக சார்பில் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் விஜய் தீவிரமாக உள்ளார். திரிஷா, சவுக்கு சங்கர் போன்றோர் பட்டியலில் இருப்பதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், புது முகங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக கூறப்படுகிறது.
தமிழக அரசியலில் அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள் அரங்கேறி வரும் நிலையில், வரவிருக்கும் 5 சட்டமன்ற இடைத்தேர்தல்கள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. திருச்சி கிழக்கு, மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் இடைத் தேர்தல் நடக்கும் என்று கருதப்படும் நிலையில் தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சியின சார்பில் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இடைத்தேர்தல் நடைபெறும் ஒரு இடத்தில் கூட மாற்று கட்சிகள் வெற்றிக்காணக்கூடாது என அவர் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.
28
இந்த தகவல் ரொம்ப புதுசு மக்கா
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்களின்படி, சில முக்கிய பிரபலங்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களின் பெயர்கள் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக நடிகை திரிஷா மற்றும் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் ஆகியோரின் பெயர்கள் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன.
38
தவெக தொண்டர்களின் ஆசை இதுதான்.!
திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகை திரிஷாவை களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கை தவெக தொண்டர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. சினிமா உலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள திரிஷா, தேர்தல் அரசியலுக்கு வந்தால் இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என கட்சி நிர்வாகிகள் கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், சவுக்கு சங்கரின் பெயரும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் விமர்சனங்கள் மூலம் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டுள்ள அவர், தேர்தலில் போட்டியிட்டால் ஊழல் எதிர்ப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தம் போன்ற விவகாரங்களை முன்னிறுத்தி பிரசாரம் செய்யக்கூடும் என கூறப்படுகிறது. அவருக்கு சமூக வலைதளங்களில் குறிப்பிடத்தக்க ஆதரவும் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
58
புதிய முகங்களை களமிறக்க விஜய் திட்டம்
இதனிடையே, மீதமுள்ள தொகுதிகளுக்கு கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இளம் நிர்வாகிகள் உள்ளிட்ட புதிய முகங்களை களமிறக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாரம்பரிய அரசியல் தலைவர்களை விட புதிய தலைமுறையை முன்னிலைப்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
68
கவனத்தை ஈர்த்து வரும் விஜயின் நகர்வு
கடந்த சில மாதங்களாக தமிழக அரசியலில் விஜயின் ஒவ்வொரு நகர்வும் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக இளைஞர்களை ஈர்க்கும் வகையில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்குவது, அவரது அரசியல் உத்தியின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. இதனால் இடைத்தேர்தல் வெறும் தொகுதி போட்டியாக இல்லாமல், விஜயின் அரசியல் செல்வாக்கை சோதிக்கும் முக்கிய களமாக மாறியுள்ளது.
மறுபுறம் அதிமுக மற்றும் பிற முக்கிய கட்சிகளும் இந்த தேர்தலை மிகவும் முக்கியமாக பார்க்கின்றன. காலியாக உள்ள 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அரசியல் ஆதிக்கத்தை நிரூபிக்க வேண்டும் என்ற நோக்கில் அனைத்து கட்சிகளும் வியூகம் வகுத்து வருகின்றன.
78
அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை
எனினும், திரிஷா, சவுக்கு சங்கர் உள்ளிட்டோர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. சமூக வலைதளங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரவும் தகவல்களின் அடிப்படையிலேயே இந்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், இந்த பெயர்கள் அரசியல் அரங்கில் பேசுபொருளாக மாறியிருப்பது, வரவிருக்கும் இடைத்தேர்தலின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
88
"அடுத்த தேர்தலுக்கும் தயார்"
தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதப்போகும் இந்த இடைத்தேர்தல், விஜயின் அரசியல் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமையுமா என்பது விரைவில் தெரியவரும்.