27 மாத மகளிர் உரிமை நிலுவை தொகை..! மொத்தமாக கொடுக்கும் தமிழக அரசு அதிரடி..! இவ்வளவு பணமா..?

Published : Nov 21, 2025, 09:11 PM IST

கடைசியாக கொடுத்த ரூ.10 ஆயிரம் என்பது ஒரு பெரிய தொகை. அது தான் தேர்தலில் பெண்கள் மனதில் மிகப்பெரிய முடிவை எடுக்க வைத்தது. 

PREV
14
வங்கிக் கணக்கில் பணம்..!

2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஜேடியூ-பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது, 1.21 கோடி பெண் வாக்காளர்களுக்கு ரூ.10,000 நிதி உதவி. இது பெண்களின் ஆதரவை ஒட்டு மொத்தமாகப் பெற்று என்.டி.ஏ கூட்டணியை 196 இடங்களில் வெற்றி பெற வைத்தது.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் தமிழகத்திலும் இது போல ஏதாவது ஒரு திட்டத்தை திமுக அரசு கொண்டு வரலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ஆர்.எஸ்.மணி கூறுகையில், “பீகாரை போல திமுகவுக்கும் அப்படியொரு திட்டட்தை தமிழகத்தி கொண்டு வருவதற்கான வாய்ப்புள்ளது. பீகாரில் பெரிய அளவிலான நலத்திட்டங்களை கொண்டு வந்தார்கள். பீகாரில் 2 லட்சம் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு நாங்கள் பணம் கொடுக்கிறோம். அட்வான்ஸாக பத்தாயிரம் கொடுக்கிறோம். நாங்கள் வெற்றிபெற்ற பிறகு அதை ப்ளூ பிரிண்ட் எடுத்து வந்து கொடுத்தால் இரண்டு லட்சம் ரூபாய் கடன் கொடுப்போம். உங்களுக்கு தொழில் தொடங்க விருப்பமில்லை,கடன் வாங்க விருப்பமில்லை என்றாலும் ரூ.10,000 பணட்தை திரும்ப கொடுக்க வேண்டாம் என்று சொல்லி தேர்தல் நெருங்கும்போது வங்கிக் கணக்கில் செலுத்தினார்கள்.

24
27 மாத மகளிர் உரிமை தொகை

இது அப்பட்டமான கையூட்டு, அதேபோல ஜனவரி மாதத்தில் திமுக பத்தாயிரம் ரூபாய்க்கு ஏதாவது ஒரு வகையில் மகளிரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தலாம். 2021 தேர்தலில் கொடுத்த வாக்குறுதி பெண்களுக்கு ஆயிரம் ரூபாய். பிறகு தகுதி உள்ள மகளிருக்கு பணம் எனக் கூறினார்கள். 2 கோடி பெண்களில் ஒரு கோடி பெண்களை மட்டும் தான் தேர்ந்தெடுத்தார்கள். அரிசி ரேஷன் கார்டு 2 கோடிகள் இருந்தும் அதில் ஒரு கோடி பேருக்கு மட்டும் பணம் கொடுத்தார்கள். இப்போது விடுபட்ட மகளிர் என 20 லட்சம் மகளிரை சேர்த்து இருக்கிறார்கள். அவர்களது வங்கிக் கணக்கில் விரைவில் பணம் செலுத்த இருக்கிறார்கள்.

இந்த மகளிர் உரிமைத் தொகையையும் ஆட்சிக்கு வந்த 27 மாதங்கள் கழித்து தான் கொடுக்க ஆரம்பித்தார்கள். 2021 மே மாதம் அதிகாரத்துக்கு வந்தவர்கள் 2023 செப்டம்பரில் தான் கொடுத்தார்கள். 27 மாதம் நிலுவை இருக்கிறது என்கிற கான்செப்ட்டை உருவாக்கி அதில் பத்து மாதத்திற்கு உரிய பணத்தை நாங்கள் செலுத்துகிறோம் என ஒட்டுமொத்தமாக கொடுத்து விடுவார்கள். பத்தாயிரம் ரூபாய் கொடுத்த மாதிரி கொடுத்தது போல் ஆகிவிடும். நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 27 மாசம் பேலன்ஸ் இருக்கிறது. அதில் பத்து மாத பணத்தை நாங்கள் ஒரு கோடி பெண்களுக்கு பொங்கலுக்கு வங்கிக் கணக்கில் சேர்க்கிறோம். மீதி இருக்கக்கூடிய 17 மாதத்துக்கான பணத்தை அடுத்த முறை ஆட்சி வந்ததும் வங்கிக் கணக்கில் செலுத்துகிறோம் என திமுக அரசு முடிவெடுக்க வாய்ப்புள்ளது.

34
திமுக அரசில் தேர்தல் யுத்தி

இதை யாரும் கேட்க முடியாது. பீகாரில் நீங்க ரூ.10 ஆயிரம் கொடுத்தீர்கள் அல்லவா? நாங்களும் இங்கே மகளிர் நிலுவைத் தொகையை கொடுக்கிறோம் என திமுக அரசு கூறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மகளிர் தொகையாக ரூ.1000 கொடுப்பதற்கும், நிலுவைத் தொகையை மொத்தமாக ரூ.10000 கொடுப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. பபீகாரில் நிதிஷ் குமார் வெற்றி பெற்றதற்கு மிக முக்கியமான காரணம் ரூ.10,000. பெண் குழந்தைகளுக்கு இலவச சைக்கிள், 12000 சுய உதவி குழுக்களுக்கு நல உதவித திட்டங்கள், பூரண மதுவிலக்கு என எல்லாம் முக்கிய காரணம். ஆனால் கடைசியாக கொடுத்த ரூ.10 ஆயிரம் என்பது ஒரு பெரிய தொகை. அது தான் தேர்தலில் பெண்கள் மனதில் மிகப்பெரிய முடிவை எடுக்க வைத்தது.

44
மகளிர் வாக்குகளை குறி வைக்கும் திமுக..!

குடும்பத்துக்கு நான்கு ஓட்டு என்றால் பல லட்சம் குடும்பங்களின் வாக்கு என்.டி.ஏவுக்கு போயிருக்கிறது. 71% பெண்கள் வாக்களித்திருக்கிறார்கள். இது கின்னஸ் ரெக்கார்டு. கடந்த முறை பீகாரில் 59% பெண்கள் தான் வாக்களித்தார்கள். இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் ஒரு குடும்பத்தோட சராசரி மாத வருவமாம் ரூ.26,000. பீகாரில் ரூ.5000 மட்டும்தான். இந்த நிலையில் குடும்பத்துக்கு 10,000 பணத்தை தேர்தல்லுக்கு 2 மாதங்களுக்கு முன் பணத்தை போட்டால் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். அதை தமிழகத்தில் திமுக அரசு கொண்டுவர வாய்ப்புகள் பல மடங்குகள் அதிகம்’’ என்கிறார்.

Read more Photos on
click me!

Recommended Stories