விஜய் அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக என்கிறார். ஆனால் திமுகவைப்போல கொள்கை எதிரி பாஜகவை விமர்சிப்பதில்லை என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் பாஜகவை விஜய் தீர்க்கமாக எதிர்த்தால் அதன் பலனை திமுக அறுவடை செய்யும் என்கிறார் பத்திரிகையாளர் ஆர்.எஸ்.மணி.
இதுகுறித்து அவர், ‘‘விஜய் தன்னை தெளிவாக நிலை நிறுத்திக் கொள்கிறார். அரசியல் தலைவர்கள் தான் எங்கே நிற்கிறோம் என்படை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.இரண்டாவது தன்னுடைய எதிரியை வரையறுக்க வேண்டும். இந்த இரண்டையும் விஜய் செய்து வருகிறார். திமுகவை தீய சக்தி என்று என்றைக்கோ எம்,ஜி,ஆரும், ஜெயலலிதாவும் சொன்னதை இன்றைக்கு விஜய் சொல்கிறார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவினர் கூட பயன்படுத்தவில்லை. அதிமுகவினரின் திமுக எதிர்ப்பு ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு நீங்கி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.