Published : Sep 08, 2025, 04:48 PM ISTUpdated : Sep 08, 2025, 05:04 PM IST
‘‘இயக்கம் தான் பெரிது தனி நபர் அல்ல. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பக்கம் துணை நிற்போம். அவரது தலைமையை வலுப்படுத்துவோம்’’ என உறுதிபடத் தெரிவித்துள்ளார் பண்ணாரி எம்.எல்.ஏ.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளரான பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட பொறுப்பாளர் ஏ.கே. செல்வராஜ் சந்திக்க ஆதரவாளர்களுடன் சென்றதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர் கொடி தூக்குவதும், பிறகு சமாதான கொடி பறக்க விடுவதுமாக இருந்த செங்கோட்டையன் இந்த முறை புயலாக சீறிவிட்டார். அதிமுக தலைமை மீது அதிருப்தியாக இருந்த எம்.எல்.ஏ.,க்களையும், சீனியர்களையும் தனது பக்கம் வளைத்துக் கொண்டிருக்கிறார் செங்கோட்டையன் எனக் கூறப்பட்டது. அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும். சசிகலா, ஓ.பி.எஸ், போன்றவர்களை மீண்டும் கட்சியில் தாமதப்படுத்தாமல் இணைத்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமி முன்வர வேண்டும். இல்லையென்றால் அவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் தாமே இறங்கி செயல்படுத்துவேன் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார் செங்கோட்டையன். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
23
சதி வலையில் பண்ணாரி
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள பலரும் செங்கோட்டையன் பக்கமாக அணி திரண்டனர். கடந்த 5ம் தேதி கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்து மனம் விட்டு செங்கோட்டையன் பேசும்போது அவரது அருகில் இடமும், வலமுமாக அதிமுக முன்னாள் எம்.பி, சத்தியபாமாவும், எம்.எல்.ஏ பண்ணாரியும் அமர்ந்திருந்தது எடப்பாடி பழனிசாமி தரப்பை கதிகலங்க வைத்தது.
செங்கோட்டையனின் அன்றைய செய்தியாளர் சந்திப்புக்கு முன்பே கோபிசெட்டிபாளையத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பவானிசாகர் எம்.எல்.ஏ பண்ணாரியும் கலந்து கொண்டார். அவர் செங்கோட்டையன்ப் பக்கம் சாய்வதற்கு காரணம், இவருக்கு மீண்டும் சீட் உறுதி என சொன்ன அதிமுக தலைமை இப்போது வேறு ஒருவருக்கு சீட்டு கொடுப்பதாக முடிவு செய்ததாக கூறப்பட்டது.
33
இயக்கம் தான் பெரிது தனி நபர் அல்ல..
இதனை தெரிந்து கொண்டு செங்கோட்டையனுக்கு ஆதரவு கொடுத்து இருப்பதாகவும் காரணம் கூறப்பட்டது. பவானி சட்டமன்ற உறுப்பினர்ப் பண்ணாரி, டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக இருந்து அதிமுகவுக்கு வந்தவர். செங்கோட்டையனுடன் எம்.எல்.ஏ பண்ணாரி சென்றது பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் சரியாக மூன்றே நாட்களில் தனது நிலைப்பாட்டை கைவிட்டு எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவியுள்ளது செங்க்கோட்டையன் தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. ‘‘இயக்கம் தான் பெரிது தனி நபர் அல்ல. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பக்கம் துணை நிற்போம். அவரது தலைமையை வலுப்படுத்துவோம். ஈரோடு கிழக்கு மாவட்டத்தில் அத்தனை நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுச்செயலாளர் இபிஎஸ் பின்னால் உறுதியாக நிற்கிறோம். செங்கோட்டையன் கட்சிப் பதவிப் பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கோபி, பவானிசாகர், அந்தியூர் தொகுதி அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு விலகியதாக கூறப்படுவது உண்மையில்லை’’ என உறுதிபடத் தெரிவித்துள்ளார் பண்ணாரி எம்.எல்.ஏ.